|
New Page 1
குணங்களும் குற்றங்களும்
தன்னைச் சாராமல் இருப்பவன்; இவ்வகையில் எல்லாப்பொருள்களையும் விட்டு நீங்காதவனாகி எங்கும்
பரந்திருக்கின்ற அந்நற்குணங்களையுடைய ஒப்பற்ற இறைவனை நாம் சேர்ந்தோம்.
வி-கு :
உரு என்றது அசித்தினை. அரு என்றது ஆத்துமாவை. புலன் - காணப்படுகின்ற பொருள். இரண்டாவது புலன்
- அப்பொருள்களின் தன்மைகள்.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 1முதற்பாட்டிலே தலைமையாக நற்குணங்களையுடையனாக இருத்தல், அந்தமில்
இன்பத்து அழிவில் வீட்டையுடையவனாக இருத்தல், வேறுபட்ட திவ்விய மங்கள விக்கிரகத்தையுடயனாக
இருத்தல் ஆகிய இவற்றை அனுபவித்து, அவற்றுக்கெல்லாம் பற்றுக்கோடான இறைவன் உயிர்ப்பொருள்
உயிரல்பொருள்களுக்கு எல்லாம் வேறுபட்டவனாய் ஒப்புயர்வு அற்றவனாய் இருப்பான் என்று இரண்டாம்
பாட்டில் அருளிச்செய்து நின்றார்; 2ததீயத்வ ஆகாரத்தாலே 3லீலா விபூதியும்
இவர்க்கு அவற்றோடே சேர ஒரு கோவையாய்த் தோற்றும். 4‘மனிதர்களின் நடுவில்
இருக்கும் இந்தச் சரீரத்தை நினையாமல் அந்த ஈஸ்வரனிடத்து நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்
முத்தன்’ என்று நூல்களிற் கூறியிருப்பினும், 5‘முத்தன் ஆனவன் எல்லாப்பொருள்களையும்
பார்க்கின்றான்,’ என்கிறபடியே, ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகாநின்றது
முத்தனுக்கு. ‘ஆயின், இவர் முத்தரோ?’ எனின், இவர்க்குக் கர்மம் காரணமாக வந்த
1.
‘முதல் இரண்டு பாக்களால் மிக உயர்ந்த பொருள்களைக் கூறிப் போந்த
இவர், இப்பாட்டால் தாழ்ந்த
இவ்வுலகங்களைப்பற்றிப் பேசக் காரணம் யாது?’
என்னின், ‘முதற்பாட்டிலே’ என்று தொடங்கி அதற்கு
விடை
அருளிச்செய்கிறார்.
2. ததீயத்வ ஆகாரம் - இறைவனுடைய உடைமைப்பொருள் என்ற தன்மை.
3. லீலா விபூதி - விளையாட்டுக்குரிய உலகங்கள். அவை, இவ்வுலக முதல்
சத்தியலோகம் ஈறாக உள்ள
உலகங்கள். ‘உலகம் யாவையுந் தாமுள
ஆக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா, அலகிலா
விளையாட்டுடையாரவர், தலைவ ரன்னவர்க்கே சரணாங்களே,’ என்றார்
கம்பநாடரும்.
4.
‘மனிதர்களின் நடுவில்’ என்று தொடங்கும் உபநிடத வாக்கியம்,
‘மோக்ஷலோகம் போல லீலா விபூதியும்
உத்தேசியமாகத் தோற்றுமோ?’
என்னும் வினாவிற்கு விடையாகக் காட்டப்படுகின்றது. இது, சாந்தோக்கியம்.
8. 12 : 3.
5.
சாந்தோக்யம், 7 : 26.
|