|
New Page 1
‘உடையவன், உடைமை’ என்ற
உறவையுடையவர்களாய், சரீரமான ஒரே மரத்தினைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்களுள்
ஒருவனான சீவான்மா, இருவினைப் பயன்களை நுகர்ந்துகொண்டிருக்கின்றான்; மற்றொருவனாகிய பரமான்மா,
அப்பயனை நுகராதவனாய் விளங்கிக்கொண்டிருக்கின்றான்,’ என்பது மறைமொழி. ஒழிவிலன் பரந்த -
பொருள்கள் ஒன்றும் ஒழிவின்றிப் பரந்து நிறைந்திருப்பான்; இனி, ஒழிவின்மையைக் காலத்தோடு
சேர்த்து, எல்லாக் காலத்திலும் எல்லாப்பொருள்களிலும் பரந்து நிறைந்திருப்பான் எனலுமாம்.
அந்நலனுடை ஒருவனை - மேலிரண்டு பாட்டுகளாலும் அருளிச் செய்த குணங்களோடு கூடின இறைவனை நினைந்து,
‘அந்நலனுடை ஒருவனை’ என்கிறார். நணுகினம் - ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின்
அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே - இது, பொய்யோ? 1‘இது ஏதேனும் மயக்கம்
ஸ்வப்பனம் முதலியவைகளோ?’ என்று பிராட்டி நினைந்தாற்போன்று, இவரும் ‘நணுகினம் நாமே’
என்கிறார். ‘இவர் இங்ஙனம் ஐயங்கொள்ளுதற்குக் காரணம் என்னை?’ எனின், 2‘இவர்
‘ஈஸ்வரோஹம்’ என்றால் அவனுக்கும் குடிவாங்க வேண்டும்படியாய் அன்றோ இருப்பது? அஹம்
என்றால் இறைவன் அளவிலே சென்று முடிய வேண்டும்படியாக இருக்க, தேகத்து அளவிலே ஆகும் படியன்றோ
முன்பு போந்தது? கைகேயி, ‘அரசனே!’ என்று விளிக்கும்படியாகப் பிறந்து, 3‘அவள்
மகனாய்க் கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ?’ என்று எண்ணும்படியான நிலையில் நின்ற நான்
4‘அப்பரத்துவாச பகவான் சொன்ன ஆச்சிரமத்தை அடைந்தேனோ என்று ஐயப்படுகிறேன்!’
என்றான் ஸ்ரீ பரதாழ்வான். 5‘காட்டிலே வசிக்கின்ற குரங்குகளுக்கும் நாகரிகரான சக்கரவர்த்தி
பிள்ளைகளுக்கும் ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே?’ என்று
1. ஸ்ரீராமா. சுந். 34. 23.
2. ‘இவர் ஈஸ்வரோஹம்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
ஸ்வாதந்தர்யாபிமானமும் தேகாத்மாபிமானமும்
என்பது. ஈஸ்வரோஹம் -
இறைவன் ஆகின்றேன். அஹம் - நான். குடிவாங்கவேண்டும்படி இருத்தல் -
இருக்குமிடத்தோடு பெயர்ந்து செல்லும்படியிருத்தல்.
3. ஸ்ரீராமா. அயோத். 85 : 7.
கீழ்வயிற்றுக்கழலை
அறுக்க வருகிறானோ - கீழ்வயிற்றில் எழுந்த
கட்டியைப்போன்று துன்புறுத்த வருகின்றானோ என்றபடி.
4. ஸ்ரீராமா. அயோத். 99 : 8 - 9.
5. ஸ்ரீராமா. சுந்த. 35 : 2.
|