|
ப
பிராட்டி கேட்க,
1‘பெருமாளும் மகாராஜரும் சேர்ந்த சேர்த்தி, பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க,
அடியேன் அந்தப்புரக் காரியத்திற்கு வரும்படியாக அன்றோ? நானும் 2இங்ஙனே கூடிக்
கொண்டு நிற்கக்கண்டேனித்தனை,’ என்றான் சிறிய திருவடி. இறைவனுடைய அனுபவத்துக்குப் புறம்பான
நாம், அன்றி, இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் என்பார் ‘நாமே’ என்கிறார்
எனினுமாம்.
(3)
4
நாம் அவன் இவன்உவன்
அவள்இவள் உவள்எவள்
தாம்அவர் இவர்உவர்
அதுஇது உதுஎது
வீம்அவை
இவைஉவை அவைநலம் தீங்கவை
ஆம்அவை ஆயவை
அய்நின்ற அவரே.
பொ-ரை :
‘நாம்’ என்ற பெயர்ப்பொருளும், ‘அவன் இவன் உவன்’ என்னும் ஆண்பாற்பெயர்ப்பொருள்களும்,
‘அவள் இவள் உவள் எவள்’ என்னும் பெண்பாற்பெயர்ப்பொருள்களும், தாம் அவர் இவர் உவர்’ என்னும்
பலர்பாற்பெயர்ப்பொருள்களும், ‘அது இது உது எது’ என்னும் ஒன்றன்பாற்பெயர்ப்பொருள்களும், அழிகின்ற
அந்தப் பொருள்களும் இந்தப் பொருள்களும் உந்தப் பொருள்களும், நல்ல பொருள்களும் தீய
பொருள்களும், உண்டாகும் பொருள்களும் உண்டான பொருள்களும் ஆகி நிற்கின்ற எல்லாப்பொருள்களும்
அவ்விறைவரேயாவர் என்றவாறு.
வி-கு :
இங்குக் கூறப்படாத ‘யாம் நான் யான்’ என்னும் பெயர்ப் பொருள்களையும், ‘எவன் எவர் எவை’ என்னும்
பெயர்ப் பொருள்களையும் உபலக்ஷணத்தாற்கொள்க. ‘வீயும் அவை’ என்பது ‘வீம் அவை’ என வந்தது.
‘வீ’ என்னும் பகுதிக்குச் ‘சாதல்’ என்பது பொருள். ‘நின்ற’ என்பது வினையாலணையும் பெயர்.
ஈடு :
நாலாம் பாட்டு. மேற்பாட்டிலே இறைவனுடைய உடைமைப்பொருள் என்னுந் தன்மையாலே அவன் குணங்களைப்
போன்று உத்தேஸ்யமாகத் தோற்றுகையாலே லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்; இனி, வருகின்ற
செய்யுள்கள் எல்லாம் லீலா விபூதி விஷயமாகவே இருக்கின்றன. ‘ஆயின், அந்தமில் இன்பத்து அழிவில்
வீட்டினை ஒருசெய்யுளிலும், லீலா விபூதியினைப் பல செய்யுள்களிலும் அருளிச்செய்யக் காரணம்
யாது?’ எனின், நித்திய
1. ஸ்ரீராமா. சுந்த. 35 : 31.
2.
‘இங்ஙனே கூடிக்கொண்டு நிற்கக் கண்டேனித்தளை,’ என்றதனால்,
‘சேர்த்திக்குக் காரணம் அறிந்திலேன்,’
என்பது கருத்து.
|