|
உர
உரிய பத்தியினை நான்
கொடுக்கிறேன்,’ என்றும், 1‘அவன் அவன் அந்தப் பத்தியோடு அத்தேவர்களை ஆராதனை
செய்கின்றான்; என்னால் கொடுக்கப்பட்ட பலனையும் அடைகின்றான்,’ என்றும் இறைவன் ஸ்ரீ கீதையில்
அருளிச்செய்தபடியே, அவ்விரு திறத்தார்களுடைய உயிர்களுக்குள் உயிராய் நின்றனர் என்று கூறலும்
ஒன்று. இதனால், இறைவன் 2இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய்
நின்று நடத்துகையாலே, அவர்களும் அடைந்தவர்கள் ஆகின்றார்கள்; இவர்களும் பலத்தைக்
கொடுக்கின்றவர்கள் ஆகின்றார்கள்; இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் பற்றவும் மாட்டார்கள்;
இவர்கள் பலனைக் கொடுக்கவும் மாட்டார்கள் என்பது விளங்கும். அதாவது, ‘அய்யன் பாழியில்
ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவர்கட்குப் பலனைக் கொடுக்கும் ஆற்றல் உள்ளதாவது,’
என்றபடி.
(5)
6
நின்றனர் இருந்தனர்
கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர்
இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமோர் இயல்வினர்
எனநினைவு அரியவர்
என்றுமோர் இயல்வொடு
நின்றஎம் திடரே.
பொ-ரை :
‘நிற்றல், நில்லாமை; இருத்தல் இராமை; கிடத்தல், கிடவாமை; திரிதல், திரியாமை’ என ஒன்றுக்கு
ஒன்றுமாறுபட்ட தொழில்களையுடையவர் ஆதலால், எப்பொழுதும் ஒரே தன்மையினையுடையவர் என நினைத்தற்கு
அரியவர்; அப்படி நினைப்பதற்கு அரியவர் என்னும் தன்மை எப்பொழுதும் மாறுபடாமல் ஒரே நிலையோடு
கூடியிருக்கின்றவர்; வேதங்களால் பரம்பொருள் இவனே என்று உறுதி செய்யப்பட்ட திடத்தையுடையவர்;
அவர் என் தலைவர் ஆவர்.
ஈடு : ஆறாம்பாட்டு.
உலகங்களினுடைய காத்தலும் இறைவனுடைய நினைவின் அதீனம் என்றார் மேல் திருப்பாசுரத்தில்; அவற்றினுடைய
தொழில் செய்தல் செய்யாமையும் இறைவனுடைய நினைவின் அதீநம் என்கின்றார் இத்திருப்பாசுரத்தில்.
நின்றனர். . .திரிந்திலர்
- தொழில் செய்தல் தொழில் செய்யாமை என்னும் இவை, நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல்
என்றும்,
1.
ஸ்ரீ கீதை. 7 : 22.
2. இரா மடம் ஊட்டல் - இரவில் சத்திரங்களில் தங்கியிருக்கும் தம்
மக்களுக்கு உணவினை ஊட்டுதல்;
இது தாயரின் செய்கை.
|