முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
92

1

1முன்னரே படைத்தல் அளித்தல் அவன் அதீநம் என்று அருளிச் செய்தார்; அழித்தல் வேறு ஒருவர்க்கு உரியதாகில் அது தன்னது அல்லாமையால் வரும் ஐசுவரியம் குறையும் அன்றே? ஆதலால், ‘அழித்தலும் அவன் இட்ட வழக்கு,’ என்கிறார். 2இத்தால் படைத்தல் அழித்தல்களைப் பிரமன் சிவன் என்னும் அவர்களே நடத்துகிறார்கள் என்கிற குத்ருஷ்டிகளை மறுக்கிறார். ‘திடவிசும்பு’ என்கிற இத்தால் வேதநெறிக்குப் புறம்பாக நடக்கிற உலோகாயதிகரை மறுக்கிறார். ‘உடல்மிசை உயிர்’ என்கிற இத்தால் சொரூபத்தோடு ஐக்கியம் சொல்லுகிறவர்களை மறுக்கிறார். ‘சுடர்மிகு சுருதியுள்’ என்கையாலே நாராயண அநுவாகம் முதலியவற்றின் சொல்லுகிற முதன்மை, திருமகள் சம்பந்தம் இவை எல்லாவற்றையும் அங்கீகரித்தவன் ஆகிறான்.

(7)

8

        சுரர்அறிவு அருநிலை விண்முதல் முழுவதும்
        வரன்முத லாய்அவை முழுதுஉண்ட பரபரன்
        புரம்ஒரு மூன்றுஎரித்து அமரர்க்கும் அறிவியந்து
        அரன்அயன் எனஉலகு அழித்துஅமைத்து உளனே.


    பொ-ரை :
பிரமன் முதலிய தேவர்களாலும் அறிய அரிதான நிலையினையுடைய மூலப்பகுதி தொடக்கமாகவுள்ள எல்லாவற்றிற்கும் சிறந்த காரணமாகி, பின் அவற்றை எல்லாம் அழித்த பரபரன், சிவனாக இருந்து ஒப்பற்ற முப்புரங்களையும் எரித்து அழித்துப் பின் உலகங்களை எல்லாம் அழித்தும், பிரமனாக இருந்து தேவர்கட்கு ஞானத்தை உபதேசித்துப் பின் ஒரு காலத்தில் உலகத்தை எல்லாம் படைத்தும், அவ்விருவருடைய உயிர்களுக்குள் உயிராகத் தங்கியிருக்கின்றான்.

    வி-கு : ‘அரன் எனப்புரம் ஒரு மூன்று எரித்து உலகு அழித்தும், அயன் என அமரர்க்கு அறிவியந்து உலகு அமைத்தும் உளன்,’ எனக் கூட்டுக.

 

1. மேல் திருப்பாசுரத்தில், ‘படர்பொருள் முழுவதுமாய்’ என்ற தொடரால்
  படைத்தலையும், இத்திருப்பாசுரத்தில் ‘கரந்து எங்கும் பரந்து உளன்’
  என்றதொடரால் அளித்தலையும் அருளிச்செய்திருத்தல் காண்க.

2. இவ்விடத்தில், ‘ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல், மைந்துடை
  ஒருவனும் மடங்கலும் நீ; நலமுழு தளை இய புகரறு காட்சிப், புலமும் பூவனும்
  நாற்றமும் நீ’ என்னும் பரிபாடற்பகுதியும், ‘ஐந்து தலையைத் தோன்றுவித்த
  அணங்குடை அருந்திறலையுடைய ஈசன். மடங்கல் - அவனினாய
  உலகுயிர்களின் ஒடுக்கம். ‘பூவில் நான்முகனும் அவனினாய உலகுயிர்களின்
  தோற்றமும் நீ. அழிப்பும் படைப்பும் கூறியவாறு,’ என்னும் அதன் உரையும்
  ஒப்பு நோக்கத் தக்கன.