|
என
என்னப் போகாது; முதலிலே
இல்லை என்னில், 1சர்வ சூந்யவாதம் சித்தியாது. இனி உன்னைக் கேட்கிறேன்; நீதான்
இறைவன் உளன் என்கிற சொல்லாலே அவன் இல்லாமையைச் சாதிக்கப் பார்க்கிறாயோ, இல்லை என்கிற
சொல்லாலே அவன் இல்லாமையைச் சாதிக்கப் பார்க்கிறாயோ?’ என்ன அவன் ‘இங்ஙனம் விகற்பித்துக்
கேட்பதற்குக் கருத்து என்?’ என்ன. ‘உளன் என்கிற சொல்லாலே சொன்னால். உனக்கு விருப்பமான
இல்லாமை சித்திக்காதது போன்று, இல்லை என்கிற சொல்லாலும் உனக்கு விருப்பம் இல்லாத அர்த்தமேகாண்
சித்திப்பது; ஆன பின்னர், நீ இல்லை என்கிற சொற்கொண்டே அவன் உண்மையைச்சாதிப்பான்.
உலகத்தில் உண்மை இன்மைச் சொற்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம்? அப்படிக்
கொள்ளில், நீ நினைக்கிற பொருள் உன்னால் சாதிக்கப் போகாது; அங்ஙனம் கொள்ளாயாகில்
வாதந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை.’
உளன் எனில் உளன்
- நான் உளன் என்று சொல்லுவது போன்று சொல்லில்தானே உளன். இறைவனது உண்மையை முதலிலே இல்லை
என்றே அவன் இறைவன் உண்மைக்கு இசையானாதலின், ‘உளன் எனில்’ என்கிறார். அவன்
உருவம் இவ்
1.
‘எல்லாம் உள்ளவை’ என்று கூறின், எப்பொருள் தோன்றுமோ,
அப்பொருளே ‘எல்லாம் இல்லவை’ என்று
கூறினும் தோன்றுவதாம்,
உலகத்தில் ‘உள்ளது’ என்றும், ‘இல்லது’ என்றும் இரண்டு வகையாக
வழங்குகிற
சொற்களை ஆராய்ந்தால், உள்ளதான பொருளுக்கே
தோன்றுகிற நிலைமை வேறுபாடுகள் என்பது
விளங்கும். ‘இங்கே குடம்
இருக்கிறது,’ எனின், மண்ணினுடைய நிலைமை வேறுபாடு தோன்றும்:
அதாவது,
முன்பு மண்ணாய் இருந்த பொருள் இப்பொழுது குடமாகிய
வேறொரு நிலையைப் பெற்றுள்ளது என்றபடியாம்.
‘குடம் உடைந்தது,’
எனின், குடம் என்னும் காரிய நிலைமையை விட்டு மண்ணாகிய காரண
நிலையாய்
மாறிவிட்டது என்றபடியாம். ஆகவே, எவ்வகையிலும் எவ்வகைச்
சொல்லாலும் அடியோடு இல்லாமை பெறப்படாது.
‘ஆயின், முயற் கொம்பு
இல்லை,’ ‘ஆகாயத்தாமரை இல்லை’ என்ற இடங்களில் முழுதும் இன்மை
விளங்குகின்றனவே! இவ்விடங்களில் வேறொரு நிலைமையை யடையும்
தன்மை கூறமுடியாதே?’ எனின், இச்சொற்களாலும்
முழுதும் இன்மை ஒரு
போதும் பெறப்படாது. ‘யாங்ஙனம்?’ எனின், ‘முயற் கொம்பு இல்லை,’
எனின்,
‘முயல் இல்லை, கொம்பு இல்லை’ என்று பெறப்படுமோ? முயலுக்கும்
கொம்புக்கும் சம்பந்தமின்று என்பதே
பெறப்படும்; அப்பொருள்களுள்
ஒன்றற்கொன்று சம்பந்தம் இன்று என்று சம்பந்தம் இன்மை மாத்திரம்
பெறப்படுமேயன்றி அப்பொருள்களே அடியோடு இல்லை என்பது ஒரு
போதும் பெறப்படாது அன்றே? ஆகவே,
சர்வசூன்ய வாதம் ஒரு போதும்
பெறப்பட வகையின்று என்பதாம்.
|