முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
63

பத

பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் தந்தான் என்கிறார்,’ என்று பட்டர் அருளிச்செய்வர். கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகக் கூடியது பத்தி. அந்தப் பத்தியின் நிலையிலே இறைவனுடைய திருவருள் நிற்க, பின்னர்த் தொண்டு செய்வதற்குக் காரணமாய் முன்னே உண்டான பத்திதான் இவ்வாழ்வாருடைய பத்தி. ‘ஆழ்வார் 1பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு 2தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். ‘எவ்வாறு?’ எனின், ‘நாம் அனைவரும் பிரபந்நர்களாய் இருப்பினும், ஓர் ஆண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக்கொள்ளுகின்றோம் அன்றோ? அது போன்று, 3‘உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ யாவான் இவர்க்கு.

    அருளினன் - ஒரு விதக்காரணமும் பற்றாமல் அருளிக்கொண்டு நிற்கக் கண்ட இத்தனை, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின், ‘எனக்கு அருளினன்’ என்றிலர். இனி, தாம் விரும்பாமல் இருக்கவும், மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போன்று, தானாகவே அருள் செய்துகொண்டு நின்றான் ஆதலின், ‘அருளினன்’ என்கிறார் எனலுமாம். 4‘மிக்க பெருமையோடு கூடியவனும் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனுமான

 

1. பிரபந்நர் - பிரபத்தி நெறியில் நின்றவர். பிரபத்தி என்பது, இறைவனைப்
  பற்றுதற்குரிய நெறிகளுள் ஒன்று; ‘பிரபத்தி’ என்பதற்கு நன்றாக அடைதல்
  என்பது பொருள். ‘அடியேன் நான் முயற்சி இன்றி நின்னருளே
  பார்த்திருப்பன் நீசனேன்,’ என்கிறபடியே அடைந்திருத்தல். பத்தி நிஷ்டர் -
  பத்தி நெறியில் நின்றவர்.

2. தேகயாத்ராசேஷம் - உடல் உயிரோடு கூடி நிலைத்திருப்பதற்குக்
  காரணமாக இருப்பது. அதாவது, நாம் உடலோடு கூடி வாழ்ந்து இருப்பதற்கு
  உணவு இன்றியமையாதது போன்று, ஆழ்வார், தம் உடலோடு கூடி வாழ்ந்து
  இருப்பதற்குப் பத்தி இன்றியமையாதது என்பதாம். ‘பத்தி’ என்றது, பத்தி
  காரணமாகச் செய்யப்படும் கைங்கரியங்களை.

3. ‘பத்தி அல்லது பத்தியினாற் செய்யப்படும் கைங்கரியங்கள்,
  உணவினைப்போன்று தேகயாத்திரைக்குக் காரணமாமோ?’ எனின், அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘உண்ணுஞ்சோறு’ என்று தொடங்கி. இது,
  திருவாய். 6. 7 : 1.

4. தைத். நாராயண. 6 : 10.