முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
182

இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக, இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூதுவிடுகிறாள். இவ்விடத்தில் ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

    ‘பிரிந்தவன் மீண்டு வருவான் என்று நினைந்து தூது விடுதற்குக் காரணம் யாது?’ எனின், தன் மேன்மையாலே இத்தலையில் தன்மை பாராதே வந்து கலந்தான்; கலந்த பின்னர் இவளிடத்துள்ள குற்றங்களைக் கண்டான்; கண்டு பிரிந்தான்; பிரிந்த அளவிலே ‘இது அன்றோ இருந்தபடி’ என்று அநாதரித்தான். கண்ட தலைவி, ‘குற்றங்களைப் பார்த்தல் மட்டுமே அன்றிச் செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துக்கோடல் என்ற குணவிசேடம் தம் ஒருவருக்கே அடையாளமாக இருப்பது ஒன்று உண்டு; அதனை அறிவிக்க வருவான்,’ என்று அந்த அபராதஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.

    1
அநாதிகாலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த இறைவன், இவர்பக்கல் வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து, இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி எனப்படும். அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக்கட்டப்பெறாமை பிரிவு எனப்படும்.

34

        அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும்நின்
        அஞ்சிறைய சேவலுமாய் ஆஆஎன்று எனக்குஅருளி
        வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்குஎன் விடுதூதாய்ச் சென்றக்கால்
        வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ.

    பொ-ரை : ‘அழகிய சிறகுகளையும் மடப்பத்தையுமுடைய நாரையே, அருளோடு கூடின நீயும், அழகிய சிறகுகளையுடைய நினது

 

1. இங்குக் கூறியுள்ள பொருள், இத்திருவாய்மொழிக்கு உள்ளுறை.