முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
190

New Page 1

கொடுவந்து சேர்க்கச் சொல்லுகிறேனோ? ஒரு வார்த்தையைக் கூறின் என் செய்யும்?’ என்பாள், ‘உரைத்தக்கால் என் செய்யும்?’ என்கிறாள். இத்தொடரில், சென்று கூறின், அதற்குக் கைம்மாறாக அவன் உபய விபூதிகளையுந் தரினும் தருவான் என்ற குறிப்புப் பொருளும் தோன்றும். இனம் குயில்காள் - என்னைப் போன்று தனித்திருக்கின்றீர்கள் அன்றே? நீர் அலிரே - நீர்மைக்கு நீங்கள் அன்றோ? (இங்கு நீர் என்பது, நீர்மை என்ற சொல்லின் விகாரம்; நீர்மை-தன்மை) அன்றி, இதற்கு, ‘யானும் தலைவனும் சேர்ந்திருக்கும் போது கேட்டவற்றிற்கு எல்லாம் விடை பகர்ந்து வந்த நீங்கள், அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனீர்களோ?’ என்று கூறலுமாம். (இங்கு ‘நீர்’ என்பது, முன்னிலைப் பெயர்.) முன் - நான் பாபம் பண்ணிப் போந்த காலம் ஓர் எல்லையுடன் கூடியதோ? ‘அன்று’ என்றபடி. இதனால், சென்ற காலம் அனைத்தையும் குறிக்கிறாள். செய்த - சங்கற்பித்துவிட்ட அளவேயோ? அன்று; சரீரத்தால் செய்தது என்றபடி. முழுவினையால்-அவற்றுள் ஏதேனும் 1அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி, அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட்பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும் ஒரு வரையறைக்குட்பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக்கொள்ள முடியும்?’ என்பதாம். ‘ஆயின், அத்தகைய தீவினைகளையுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின், இறைவனால் அத்தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது? இங்கே 2‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்- 3தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய, ஒன்று இரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாபம்,’ என்று திருக்கோட்டியூரிலே

 

1. அகஞ்சுரிப்பட்டது உண்டோ-குறைந்தது உண்டோ?

2. ‘ஒரு முழுக்காலும்’ என்று தொடங்கும் வாக்கியம் தீவினைகளைத் தம்மால்
  போக்கிக்கொள்ள முடியாமைக்கும், இறைவனால் போக்க முடியும்
  என்பதற்கும் காட்டப்படும் ஐதிஹ்யம். இவ்வைதிஹ்யம்-புண்ணிய தினத்தில்
  பாவங்கள் போகும்பொருட்டுப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடல் வேண்டாவோ
  என்று கேட்ட கோளரியாழ்வான் என்ற ஒருவர்க்குத் தெற்காழ்வான் என்ற
  ஒருவர் கூறும் விடை.

3. தெற்காழ்வான் - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் இறைவன்
  திருப்பெயர். திருவாழி - அவர் கையிலுள்ள சக்கரம்.