முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
214

New Page 1

    ‘அதற்கு இப்பொழுது வந்தது என்?’ என்ன, சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் - சமுதாய சோபையோடு நிறத்தில் நிறைவையும் இழந்தேன். ‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது; ‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று, இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’ இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள். இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள். பெரிய திருமலை நம்பி, தம்முடைய இறுதிக்காலத்திலே, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பில் திருத்திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

(8)

42

        நாடாத மலர்நாடி நாடோறும் நாரணன்றன்
        வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
        வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என்செய்வதோ
        ஊடாடு பனிவாடாய்! உரைத்துஈராய் எனதுஉடலே.

    பொ-ரை :
‘நடுவே திரிகிற குளிர்ந்த வாடைக்காற்றே, தேடுதற்கு அரிய பூக்களைத் தேடிக் கொணர்ந்து, நாடோறும் நாராயணனுடைய வாடுதல் இல்லாத மலர் போன்ற திருவடிகளில் வைத்து வணங்குவதற்காகவே அவன் இவ்வுயிர்களைப் படைத்தான்; அவ்வாறு இருக்க, ‘பிரிவிலே நிலைத்துத் தனியே தங்கியிருத்தலாகிற நல்வினையற்ற காரியம் என்ன பயைனைச் செய்வதோ?’ என்று அவனுக்குக் கூறி, தக்க மறுமொழி இல்லையாகில் மீண்டு வந்து எனது உடலை அறுக்கக் கடவாய்,’ என்கிறாள்.

    வி-கு :
‘நாடி வைக்க வகுக்கின்று,’ என முடிக்க. ‘மலரடிக்கீழ்’ கீழ்-ஏழனுருபு. ‘பொற்றொடி அரிவை பொழுதுகண்டு இரங்கின்று,’ (புற. வெ. 314.) என்புழிப்போன்று, ‘வகுக்கின்று’ என்பதும் ஒரு சொல்; ‘வகுத்தது’ என்பது பொருள். வீடு-முதனிலை திரிந்த தொழிற் பெயர். வாடை, விளி ஏற்றலின் ‘வாடாய்’ என நீண்டது.

   
ஈடு : ஒன்பதாம் பாட்டு, ‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்’ என்று இருக்கிற சமயத்தில் வாடைக்காற்று வந்து உடம்பிலே பட்டது; அதனுடைய தோற்றரவைக் கண்ட தலைவி