முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
351

New Page 1

மையையுடையராய்க்கொண்டு தொழுதால், தானும் அவர்களை ஒழியச் செல்லாமையையுடையனாய் அவர்கள் கண் வட்டத்தினின்றும் கால் வாங்க மாட்டாமல் நிற்பான் என்பார், ‘கண்ணுள்ளே, என ஏகாரங் கொடுத்து ஓதுகிறார். எண்ணிலும் வரும் 1‘கடம்’ படம், ஈஸ்வரன்’ என்றால், ‘நம்மை ‘இல்லை’ என்னாமல், இவற்றோடு ஒக்க எண்ணினான் அன்றே?’ என்று வரும். அன்றிக்கே, ‘இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா, இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன்’ என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப்போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான் என்று கூறலுமாம். அன்றிக்கே, ‘இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான் என்று பொருள் கூறலும் ஒன்று. 2அன்றிக்கே, நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் என்று கோடலுமாம். வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.

    என் இனி வேண்டுவம்-‘பரமபத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்கிறார். ‘இறைவன், இவ்வாத்துமாப்பக்கல் வெறுப்பின்மைக்குக் காலம் பார்த்திருந்து முகங்காட்டுவானான பின்பு, இவனுக்கு நன்மை தரும் காரியங்களில் இவன் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்றபடி. இப்படி இருக்கிற பகவானுடைய சொரூபத்தைப் புத்தி பண்ணுகையே, இவன் பிரபந்தன் ஆகையாவது. இறைவன், தன்னுடைய சொரூபத்தை உபதேசித்து, 3‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்சவேண்டா ‘மாசுச:’ என்றது போன்று, இவரும் இறைவனுடைய சொரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார். இவற்றால், வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது, அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

    வேல்வெட்டிநம்பியார், ‘நம்பிள்ளை
யைப் பார்த்துப் ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலிய சில

 

1. ‘எண்’ என்பதற்கு எண்ணுதல் என்று பொருள் கொண்டு, அதனை வாதிகள்,
  வேதாந்திகள், லௌகிகர் இவர்கள் பேசும் முறையிலே மூன்று
  உதாரணங்களால் விளக்குகிறார், ‘கடம், படம்’ என்று தொடங்கி.

2. இங்கு ‘எண்’ என்பதற்கு எண்ணம் என்பது பொருள்.

3. ஸ்ரீகீதை. 18 : 66 மாசுச :- துக்கப்படாதே.