முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
65

New Page 1

தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி 1யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருப்பான் என்பதாம். இனி, அதிபதி - தலைவன் என்று கோடலுமாம்.

    இதற்கு அப்பால், விக்கிரகத்தின் வேறுபாட்டினைச் சொல்ல ஒருப்பாட்டுக் கீழ் நின்ற நிலையினைக் 2குலுக்கி ‘அவன்’ என்று அவ்வருகே போகிறார். துயர் அறு சுடர் அடி - துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள 3முதலிகள் அருளிச்செய்வர்; அதாவது, எல்லா ஆத்துமாக்களினுடைய எல்லாத் துன்பங்களையும் போக்குதலையே தம் இயல்பாகவுடைய திருவடிகள் என்பதாம். இனி, 4எம்பெருமானார், 5ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத்தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், 6இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர். சுடர் அடி - எல்லையற்ற ஒளி உருவமான திவ்விய மங்கள விக்கிரகத்தைச் சொல்லுகிறார். சுடர் - 7பஞ்ச சத்தி மயமான புகரை அருளிச்செய்கிறார். அடி - அடியவன் இறைவனிடத்தில் விரும்புவது திருவடிகளை. பால் குடிக்கும் குழந்தைகள், தம் தாயின் மார்பிலே

 

1. ‘யானைக்குக் குதிரை வைத்தல்’ என்றது, பிடி கொடுக்குமாறு போன்று
  இருந்து பிடி கொடாமையைப்பற்ற. யானைக்குக் குதிரை வைக்கையாவது,
  யானையின் வேகத்தைப் பரீக்ஷிக்கின்றவர்கள், குதிரையை முன் நடத்தி
  யானையைப் பின் நடத்துவார்கள்; யானையும் துதிக்கையாலே குதிரையைத்
  தொடும்படி கிட்டச் சென்று பின்னையும் தொடமாட்டாதே ஒழியும்.
  அப்படியே, நித்தியசூரிகட்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்றபடி.

2. குலுக்குதல் - விக்கிரகத்தின் இனிமையினை அனுபவித்தற்கும் இடம்
  உண்டாகும்படி செய்தல்.

3. முதலிகள் - முதன்மையினையுடையவர்கள்; பெரியோர்கள்.

4. எம்பெருமானார் - இராமாநுசர்.

5. ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

6. ‘இவர்’ என்றது ஆழ்வாரை; ‘அவன்’ என்றது இறைவனை.

7. பஞ்ச சத்திகள் - பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
  இவ்வுலகம் ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டது. அவ்வுலகம்
  பஞ்சசத்திகளாலாயது என்பர்.