முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
73

என

என்கிறது,’ என்று பட்டர் அருளிச்செய்வார். 1‘சிறந்த போர் வீரர்கள் பகைவர்கள் விஷயத்தில் திருடர்களைப் போன்று வஞ்சனையாகக் காரியங்களைச் செய்யமாட்டார்கள்,’ என்பது வைதர்மிய திருஷ்டாந்தத்திற்கு உதாரணமாம். எனன் உயிர் - இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்; இனி, உபலக்ஷணத்தால், ‘எவனுக்கு உயிர்கள் அனைத்தும் சரீரமோ’ என்கிறபடியே, எல்லா உயிர்களுக்கும் தாரகன் என்று கோடலுமாம். ‘இறைவனுடைய தன்மையினைக் கூறும் இவ்விடத்தில் ‘என்னுயிர்’ என்று கூறவேண்டியது என்?’ எனின், இவ்வுயிர்களை எல்லாம் தனக்குச் சரீரமாகக் கொண்டு தான் ஆத்துமாவாய்த் தாரகனாய் இருப்பவன் என்னும் அர்த்தமும் சொல்லவேண்டுவது ஒன்றாதலின் சொல்லுகிறார்: மிகுநரை இலன் - ‘இறைவனாகிய தான் உயிர்களைச் சரீரமாகக் கொண்டு தாரகனாய் எல்லாரையும் ஏவுகின்றவனாய் இருப்பது போன்று, தன்னையும் ஏவக்கடவது ஒரு வேறு பொருள் உளதோ?’ எனின், மேம்பட்டாரை யுடையன் அல்லன். 2‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’ என்பது போன்று, இவரும் ‘இனன் இலன், மிகுநரை இலன்’ என்று அருளிச்செய்கிறார்.

    ‘மனனகம் மலமற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவிலன், பொறியுணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன், உணர் முழுநலம், இனன் எனன் உயிர்’ என்று சொற்களைக் கூட்டி முடிக்க. இனி, ‘எனன்’ உயிரானவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே,’ என முதற்பாட்டோடே கூட்டி முடித்தலுமாம்.

(2)

3

        இலன்அது உடையன்இது எனநினைவு அரியவன்
        நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
        புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்தஅந்
        நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

   
பொ-ரை : ‘அதனை இல்லாதவன்; இதனையுடையவன்,’ என்று இரு தன்மையாலும் நினைக்க முடியாதவன்; காணப்படுகின்ற இவ்வுலகமும் ஆகாயத்திலுள்ள தெய்வலோகங்களும் முதலாக எல்லா உலகங்களிலுமுள்ள உயிரல்பொருள்களை எல்லாமுடையவன்; உயிர்ப்பொருள்களை எல்லாமுடையவன்; காணப்படுகின்ற எல்லாப்பொருள்களும் தானாக இருப்பவன்; அவ்வாறு இருப்பினும், அப்பொருள்களின்

 

1. மாகம். 16 : 52.
2. ஸ்வேதாஸ்வதர உபநிடதம்.