முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
75

சர

சரீரம் கிடக்கச்செய்தே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார். ‘ஆயின், இவ்வுலகங்கள் இறைவன் உடைமை என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், அரசர்கட்கு நாடு எங்கும் தமது ஆணை செல்லுமாயினும், தங்கள்தேவியரும் தாங்களுமாகப் பூந்தோட்டங்கள் சிலவற்றைக் குடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் விளையாட்டு இன்பம் துய்க்குமாறு போன்று, 1‘திருவிண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே’ என்கிறபடியே, இறைவனும் இறைவியுமாகக் கண் குளிரப் பார்த்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி, அவர்கட்கு விளையாட்டு இன்பம் துய்த்தற்குக் காரணமாய் இருத்தலால் உடைமை என்பதனை அறிதல் கூடும்.

    இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் - ‘அது இலன்; இது உடையன்,’ என நினைத்தற்கும் அரியவன். நுகரப் படுபொருள்களுள் ஒன்றனைக் கூறி, ‘அஃது இலன்’ என்று சொன்னால், அஃது ஒழிய மற்றைப் பொருள்களையுடையவன் என்று தோன்றும்; ஒரு பொருளைக் காட்டி ‘இதனை உடையவன்’ என்று கூறின், இப்பொருளைத் தவிர மற்றைப் பொருள்கள் எல்லாம் இல்லாதவன் என்று தோன்றும் : ‘இலன் அது’ எனின், ஓர் அளவிற்கு உள் அடங்கிய ஐசுவரியத்தையுடையவன் ஆவன்; ‘உடையன் இது’ எனின், அற்ப ஐசுவரியத்தையுடையவனாவன்; ஆகவே, இரண்டுவழியாலும் இறைவனுடைய ஐசுவரியம் குறைந்து தோன்றும்; ஆதலின், ‘இலன் அது உடையன் இது என அரியவன்’ என்கிறார். ‘உலகத்துப் பொருள்களுள் ஒன்று சேராதவற்றையும் சேர்த்து நினைத்தல் கூடும்; ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே கலசம் இருக்கிறதாகவும், அதன்மேலே சால் இருக்கிறதாகவும், அதன்மேலே மகாமேரு இருக்கிறதாகவும், இப்படி, சேராத பொருள்களைச் சேர்த்து நினைக்கலாம்; அப்படி நினைத்தற்குதான் இறைவன் விஷயமாக இருப்பானோ?’ என்னில், மனத்தால் அளவு இடுவதற்கும் அரியனாக இருப்பான் ஆதலின், ‘நினைவரியவன்’ என்று அருளிச்செய்கிறார்.

    ‘ஆயின், இறைவனுடைய செல்வத்தைப் பேசும் படிதான் என்?’ என்னில், நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் - 2‘உலகத்திற்குத்தலைவன்’ என்னுமித்தனை. நிலனிடை என்கிற இது பாதாளத்

 

1. திருவாய். 6. 3 : 5.
2. தைத்திரீ. நாரா. 6. 1 : 11