முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
83

கள

களாய் உபகாரம் கொண்டவையாவதும் சர்வேஸ்வரன் உள் உயிராய் நின்று நடத்துகையாலே; அவன் இப்படி நடத்திக்கொண்டு போகாத அன்று அவர்கள் காப்பாற்றுகின்றவர்கள் ஆகமாட்டார்கள் என்கிறார். ‘செல்வங்களைச் சேர்க்கின்ற தன்மையிலும் ஆபத்துகளைப் போக்குந்தன்மையிலும் புருடோத்தமனாகிய இறைவனைத் தவிர, ஆற்றலுடைய வேறு ஒருவன் காணப்படுகின்றான் இலன்,’ என்றும், 1‘காப்பாற்றுந்திறன் விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்றும் பிரமாணங்கள் இருத்தலால், எல்லா நன்மைகளையும் செய்து தர வல்லவனாய், பகையையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய வேறு ஒருவர் பக்கல் இந்தக் காக்குந்தொழில் கிடவாது. 2‘செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற பீஜாக்ஷரம் யாது ஒன்றோ, 3அந்தப் பிரணவத்துக்குள் மறைந்துள்ளது அகரம். அது காக்கும் இறைவனைக் காட்டுவது ஒன்று; அதற்குப் பொருளாக உள்ளவன் யாவன் ஒருவன்? அவன் சர்வேஸ்வரன்,’ என்று உபநிடதம் புகலும்.

    அவர் அவர் - தம்முடைய விருப்பம் இன்மையும் அவர்களுடைய பல்வகைப்பட்ட தன்மையும் தோற்றுகிறது. தம தமது - குணபேதத்தால் வந்த பல பேதத்தைச் சொல்லுகிறது. அறிவு அறி - அவற்றிற்கு அடியான ஞானபேதத்தைச் சொல்லுகிறது. வகை வகை - மார்க்க பேதங்களாலே, உயிர்கள் பல்வேறு வகைப்பட்டு இருத்தல் போன்று, அவ்வுயிர்கள் மாட்டு உண்டாகின்ற சுவை வேறுபாடுகளும் பலவாகும் என்பது தோன்ற, ‘தமதம தறிவறி வகைவகை’ என அடுக்குத் தொடராகக் கூறுகின்றார். ‘சுவை வேறுபாடு உண்டாகக் காரணம் யாது?’ எனின், மக்கள் இராசதகுணம் மிக்கவர்களாயும், தாமதகுணம் மிக்கவர்களாயும், இரண்டும் கலந்த சத்துவ குணத்தையுடையவர்களாயும் இருக்கின்றார்கள்; அப்படியே

 

1. ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

2. தைத்திரிய நாராய. 6. : 10.


3. பீஜாக்ஷரம் - ‘ஓம்’ என்னும் பிரணவம். ‘ஓம்எனும் ஓரெழுத்து அதனின்
  உள்ளுயிர், ஆமவன் அறிவினுக்கு அறிவும் ஆயவன்,’ என்ற கம்பராமாயணச்
  செய்யுள் (இரணியன் வதை, 76) ஈண்டுக் கருதத் தகும்.