முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
112

மன

மன் உயிர் ஆக்கைகள் - உயிர் பொருந்தியிருக்கின்ற சரீரங்கள் என்னுதல்; 1நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் என்னுதல், திறந்து கிடந்த வாயில்கள்தோறும் நுழைந்து 2திரியும் பொருள் போன்று, ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின், ‘உயிர் யாக்கைகள்’ என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின், 3‘மகிழ் அலகு ஒன்றே போல் மாறும்பல் யாக்கை’ என்கிறபடியே, 4‘ஓரலகுதானே காணிநிலையிலே நிற்பது கோடி நிலையிலே நிற்பது ஆமாறு போன்று, ஓர் உயிர் தானே கர்மங்களின் வேறுபாட்டினால் தேவ சரீரம் முதலான சரீரங்கள் பலவற்றை மேற்கொள்ளுதல். இனி, உயிர் என்பதனைத் தொகுதி ஒருமையாகக் கொண்டு பல உயிர்கள் என்று கோடலுமாம்.

    என்னும் இடத்து - இறைவனுடைய குணங்களை அளவிட்டு அறியினும், அளவிட்டு அறிய முடியாதபடி குற்றங்களின் மிகுதி இருத்தலின், ‘என்னுமிடத்து’ என்கிறார். இறை உன்னுமின் - இதில் அற்பத்தை ஆராயுங்கோள். நீரே - இதற்கு ஒரு பிரமாண விருப்பமும் வேண்டுவது இல்லை. சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி. 

(2)

14

        நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
        சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.

    பொ-ரை : யான் எனது என்னும் செருக்காகிய இவற்றைப் பக்கவேரோடே அடியோடு அழித்து, இறைவனைச் சேர்மின்; அவ்வாறு சேர்தற்கு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்றவாறு.

    வி-கு :
‘யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்,’ என்றார் திருவள்ளுவரும். நேர் - ஒத்தது. நிறை - மிக்கது, ‘இல்’ என்பது, குறிப்பு வினை முற்று.

    ஈடு : மூன்றாம் பாட்டு. ‘குற்றங்களைப் பார்த்த அளவில் விடலாம் என்றீர்; காலம் அநாதி; அக்காலத்தில் ஈட்டிய வினைகளும் முடிவின்றி இருக்கின்றன; ஆதலால், பற்றின காலம் எல்லாம் வேண்டுமன்றோ விடுகைக்கும்?’ என்ன, விடுந்தன்மையினைச் சுருங்க

 

1. ‘மன்’ என்பதற்குப் பொருந்துதல் என்றும், நிலைபெறுதல் என்றும் இரு
  பொருள் கூறுகிறார்.

2. திரியும் பொருள் - நாய்.

3. முதல் திருவந்தாதி. 49.

4. ஓர் அலகு - ஒரு விதை.