முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
119

New Page 1

    பொ-ரை : இறைவனும் பற்றையுடையவனாகி உலகத்துப் பொருள்கள் எல்லாமாகவும் நின்றான்; ஆதலால், நீயும் பற்றையுடையையாய் அவ்விறைவனுடைய தொண்டுகள் அனைத்திலும் சேர்க,’ என்கிறார்.

    வி-கு :
பற்றிலன் - பற்றினையுடையவன்; இல் - வீடு அதாவது, இருப்பிடம். பற்றிலையாய் - பற்றினையுடையையாய், முற்றில் - முழுவதிலும்.

    ஈடு : ஆறாம்பாட்டு. பற்றுமிடத்தில் வரும் இடையூற்றை நீக்குதலை அருளிச்செய்தார் மேல்; ‘ஆயின், நீர் பரிகாரம் சொல்லுகைக்கு எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய், சேஷியாயிருக்கிற அவன்தான் நமக்குக் கைப்புகுந்தானோ?’ என்ன, அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஒன்று இல்லை; அவன் பற்றுக்கு இருப்பிடமானவன் என்கிறார்.

    பற்றிலன் - அன்பை உறைவிடம் ஆக உடையவன். பற்றிலன் என்பது - பற்றிலான் என்பதன் விகாரம்; ‘அகத்திலான்’ என்பது போன்று; அகத்திலான் - அகத்திலே இருப்பவன். ‘அன்புள்ளவனாயினும் இறைவன் அன்றோ அவன்?’ எனின், ஈசனும் - இறைமைத் தன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடக்குமித்தனை. ‘கழற்றொண்ணாமையால் கிடந்தாலும் அச்சத்திற்குக் காரணமாமே?’ எனின், ஆகாது; அவ்விறைமைத்தன்மை இவ்வன்பு குணமாகைக்காகக் கிடக்கிறது; அஞ்சுதற்கு உடல் அன்று; பெரியவன் எளிமையே குணம் என்று சொல்லப்படும். ‘ஆயின், இதனை நாம் காணும் இடம் உண்டோ?’ எனின், 1‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்

 

1. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 21.