முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
123

1

1‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால் ஒருவன் இரு வினைப்பயன்களை நுகராநிற்பன்; ஒருவன் நுகர்வித்து விளங்காநிற்பன்; அவன் ஏவுகின்றவன்; நாம் ஏவப்படும் பொருள்,’ என்னும் முறை அறியவே பொருந்தலாம் அன்றே!

    ஓர் அரசகுமாரன் பூங்கா ஒன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தகப்பனதுகாண்,’ என்னவே, நினைந்தபடி நடந்து கொள்ளலாம் அன்றோ! ஆன பின்னர், ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது; தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம் என்கிறார்.

    அடங்க எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே - கட்டடங்க நன்றான செல்வத்தை எல்லாம் கண்டு, ‘நமக்கு வகுத்த ஸ்வாமியானவனுடைய செல்வம் இவை எல்லாம்,’ என்று நினைந்து, அவ்விபூதிக்குள்ளே தானும் ஒருவனாகச் சேரக்கடவன்; ‘சேரின் பயன் யாது?’ எனின், அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம்; ‘சேஷிக்கு அதிசயத்தை விளைத்தால் இவ்வாத்துமாவுக்குப் பயன் யாது?’ எனின், அவனுக்குச் சேஷமாக இருக்கும் இவ்வாத்துமாவினுடைய சொரூப சித்தி, சேஷிபக்கல் கிஞ்சித்காரத்தாலேயாய் இருக்குமே? அதாவது, அடிமை சித்திப்பதே பலன் என்றபடி. ‘நன்று; லீலா விபூதியைக் கட்டடங்க நன்றான செல்வம் என்னலாமோ? இவ்விபூதி தாழ்ச்சியையுடையது அன்றோ?’ எனின், போகபூமியாய் இருக்கும் நித்திய விபூதி; கர்மங் காரணமாக அவனாலே ஏவப்படுவதாய் இருக்கும் இவ்வுலகம்; இதனை ‘அவன் உடைமை’ என்று நினைக்கப் புக்கவாறே இதில் கர்மங் காரணமான தன்மை தோன்றாது; அவன் உடைமை என்னும் தன்மையே தோன்றும்.

    ‘ஆயின், இன்று அடங்குகையாவது என்? தொன்று தொட்டே அவன் விபூதியில் சேர்ந்தேயன்றோ இருக்கின்றேன்?’ என்னில், உடைமை உடையவன் என்னும் சம்பந்த ஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியிலேயே ஒருவனாய்ச் சேர்தல் வேண்டும்; 2கடல்

 

1. ருக்வேதம்.

2. ‘கடல் அளவிடக் கூடாததாய் இருப்பினும்’ என்று தொடங்கும் வாக்கியம்,
  இப்பாசுரத்தின் முன்னுரையில் ‘கடலிலே புக்க துரும்பானது இரண்டு
  தலையிலும் நினைவின்றிக்கே இருக்கவும், திரைமேல் திரையாகத் தள்ளுண்டு
  போந்து கரையிலே சேருகிறது இல்லையோ?’ என்னும் வினாவிற்கு விடையாக
  எழுதப்படுகின்றது.