முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
140

கறுத

கறுத்திருக்க ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே? அப்படியே எனக்கும் இது நிலை நின்ற தன்மை,’ என்றான் அன்றே?’ என்றபடி. ‘நன்று; பத்திக்கு எளியன் ஆனாலும், சுவதந்தரன் ஆகையாலே சில சமயங்களில் அரியனாகவும் இருக்கலாமே?’ எனின், உலகங்களை எல்லாம் ஆளும் அரசபுத்திரன் ஒருவன், ஒரு கால விசேடத்தில் சிறிய பொருளுக்காக அடிமைப்படுவானாயின், பின், தன் செல்வக்கிடப்புக் காட்டி மீள ஒண்ணாதது போன்று, சர்வேஸ்வரனும் பத்தியில் நிலை நின்றவனுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால், பின்னை, மேன்மை காட்டி அகலமாட்டான்; கழுத்திலே ஓலைக்கட்டித் ‘தூதுபோ’ என்னலாம்படி தன்னைக் கையாள் ஆக்கி வைப்பான். 1‘மக்கள் செய்யும் பத்தியினால், அவர்கட்குத் தன்னை அறவிலை செய்து கொடுக்கின்றான் இறைவன்; அவ்விறைவனாகிய ஜனார்த்தனனே அவர்கட்கு எப்பொழுதும் கையாளாக இருக்கின்றான்,’ என வருதலும் இங்கு ஓர்தல் தகும்.

    ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ எனவே, பத்தி இல்லாதார்க்கும் எளியனாக இருப்பனோ?’ எனின், இரான் என விளக்குகிறார் மேல். பிறர்களுக்கு அரிய வித்தகன்-பிறர்களாகிறார், ‘இவனைக் கொண்டு காரியம் கொள்ளோம்’ என்று இருக்குமவர்கள். வித்தகன்-ஆச்சரியப்படத் தக்கவன். ‘இங்கு ஆச்சரியப்பட வேண்டியது என்?’ என்னில், யசோதை முதலியவர்கட்கு எளியனாய் இருந்த அந்நிலையில்தானே, பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் முதலியவர்கட்கு அவமதிக்க முடியாதவனாய் இருத்தல். மேலும், 2பள்ளிகொண்டிருந்த காலத்தில் அருச்சுனனும் துரியோதனனும் கூடவர, அருச்சுனனுக்குத் தன்னைக்கொடுத்து, துரியோதனனுக்குப் 3பங்களத்தைக் கொடுத்துவிட்டான் அன்றே? நம் பெரியோர்கள் எம்பெருமானையே உய்வதற்கு உரிய நெறியாகப் பற்ற, அல்லாதார் தாம் செய்யும் கருமங்களே பயன்களைக் கொடுப்பனவாக நினைந்து, அக்கருமத் தொகுதிகளை மேற்கோடலைப் போன்றது ஒன்றாகும்

 

1. வைஷ்ணவ தர்மம்.

2. இங்குக் கூறப்படும் சரிதத்தின் விரிவை, பாரதத்தில் வாசுதேவனைப்
  படைத்துணையழைத்த சருக்கத்தால் உணர்க.

3. பங்களம் - பதர்.