முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
150

பிரளயத்தில் செய்யப்படும் அழித்தலையும், நாடோறும் செய்யப்படும் அழித்தலையும் ‘கெடல்’ என்ற சொல்லாலும் குறித்தனர். இடை ஒடிவு-அவாந்தர சம்ஹாரம்; அதாவது, பிரமனது ஒரு நாளின் இரவில் நடக்கும் அழிவு. இடை ஒடிவினைக் கூறியவதனால், பிரமனது ஒரு நாளின் பகற்பொழுதில் செய்யப்படும் இடை முதலையும் கொள்க. அற நிலம் - அறுதற்குக் காரணமான இடம்; அதாவது, முடிந்த இடம், ‘நிலமது’ என்பதில் ‘அது’ பகுதிப்பொருள் விகுதி. யாரே என்றதன் ஏகாரம் எதிர்மறை. ‘மாறுகொள் எச்சமும்’ (தொல், எழுத் 275.) என்ற சூத்திரத்தால் ஏகாரத்திற்கு எதிர்மறைப்பொருளும் கூறினர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘எளியவன்’ என்றார்; எளிமையை வகைப்படுத்தி அருளிச்செய்தார்; இவனுடைய அவதாரத்தின் மறைபொருள் அறிதல் ஒருவர்க்கும் நிலம் அன்று என்கிறார் இப்பாசுரத்தில்.

    அமைவுடை அற நெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து-ஒரு தருமத்தைச் செய்தால் தொடங்கும்போதே பயன் இன்றிக் கழியினும் கழியும்; இடையில் சிற்சில தடைகள் நேரினும் நேரும்; அங்ஙனம் அன்றி, 2சக்கரவர்த்தி நான்கு ஆஹூதி பண்ணி நான்கு இரத்தினங்களை எடுத்துக்கொண்டாற்போன்று, பலத்தோடே சேர்ப்பிக்கின்ற அறத்தின் வழிகள் எல்லாவற்றாலும் 3‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்திருக்குமாறு போன்று, ‘இவ்வறத்தில் இவனுக்கு அவ்வருகு ஒருவரும் இலர்,’ என்னும்படி சமைந்திருக்கை.

    அமைவுடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அதுவாம் அமைவுடை அமரரும்-பிரமன் உலகத்தைப் படைத்தால், ‘சர்வேஸ்வரனோ!’ என்று ஐயப்படும்படி இருக்கை. இப்படிச் சமைவையுடைத்தான படைத்தல் என்ன, அப்படி இருந்துள்ள அழித்தல் என்ன, அவாந்தர சம்ஹாரம் என்ன, என்னும் இவற்றைத் தங்களுக்கு நிலையிட்டுக் கொடுத்த சர்வேஸ்வரனையும் மறுத்துக் கேள்வி கொள்ள

 

1. ‘எளியவன்’ என்றார், முதற்பாசுரத்தில்; எளிமையை வகைப்படுத்தி
  அருளிச்செய்தார், இரண்டாம் பாசுரத்தில்.

2. சக்கரவர்த்தி - தசரத சக்கரவர்த்தி. நான்கு இரத்தினங்கள் - நான்கு
  புதல்வர்கள்.

3. திருவாய். 1. 1 : 1.