முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
167

அல

அல்லாத காலங்களில் கடல் நீண்டலாகாது என்னுமாறு போன்று ஒரு நியதியில்லை. நம் திருவுடை அடிகள்தம்-திருமகள் கேள்வனான சுவாமியினுடைய இதனால், நித்தியயோகத்தை அருளிச்செய்கிறார். ‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னாநின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.

   
நலம் கழல்-அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக்கொள்ளுந் திருவடிகள். வணங்கி-வணங்க. ‘வணங்க; நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினை உடனே மாளும், ஓர் குறைவு இல்லை,’ என முடிக்க. ‘ஆயினும், இறைவனைப் பற்றுதற்குக் காலம் தப்பி நின்றதே?’ என்ன, மாளும் ஓரிடத்திலும்-முடிகின்ற ஒரு கணத்திலும். வணக்கொடு மாள்வது வலம்-1‘இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ என்னாது கிடக்கிற 2சீரைப்பாயைக் கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும். இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பெற்றோடே தலைக்கட்டும் ஆதலின், ‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார். இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்; இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார். வலம்-சிறப்பு; வரம் என்ற சொல்லின் திரிபு. இனி, வலம்-வலிமையும் ஆம்.

(8) 

31

        வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
            இடம்பெறத் துந்தித்
        தலத்துஎழு திசைமுகன் படைத்தநல்
            உலகமுந் தானும்

 

1. ஸ்ரீ ராமா. யுத். 36 : 11.
2. சீரைப்பாய் - சீரையாகிய பாயையும்.