முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
170

New Page 1

‘ஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில், ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகாகுணம் ஆகையாலே, ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்துகொண்டு செல்வார்கள். மற்றும், 1சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ? அங்ஙனமே, இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் 2பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின், வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் 3அடைய வளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து, கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

    பின்னும் - பிரமன் முதலியோர்க்குத் திருமேனியிலே இடங்கொடுத்ததற்கு மேலே. தன் உலகத்தில் அகத்தனன் - தான் உண்டாக்கின பிரமனாலே உண்டாக்கப்பட்ட உலகங்களிலே வந்து அவதரிப்பான். ‘ஆயின், பிரமனும் சிவனும் தன் திருமேனியில் ஒவ்வோர் இடத்தைப் பற்றிப் பெற்ற சொரூபத்தினையுடையவர்கள் ஆகும்படி இருக்கிறவன், அவர்களுங்கூடக் காலிடஅருவருக்கிறசம்சாரத்திலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் என்?’ என்னில், புலப்பட-4‘காணவாராய் என்று என்று கண்ணும் வாயுந் துவர்ந்து’ இருப்பவர்களுக்குத் தன் நினைவினாலே அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தல் கூடாது ஆதலின், அவர்கள் கண் முதலிய கரணங்களுக்குப் புலப்பட வேண்டும் என்று, ‘ஏன்? தன் நினைவினாலே அவர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பின் என் செய்யும்?’ என்னில், 5‘மழுங்காத ஞானமே படையாக மலர்உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால்உன் சுடர்ச்சோதி மறையும்,’ என்பார்கள். ‘இப்படிப்

 

1. சாமந்தர்கள் - சிற்றரசர்கள். அமைச்சரும் ஆவர். ‘மாளிகைக்குள்ளே’ என்றது,
  அரசனுடைய மாளிகையினைக் குறித்தது. செம்பாலே நாழி அரிசியை - செம்பு
  நாழியரிசியை. நாழி - காற்படி.

2. பிராப்தி - அடைதல்.

3. அடையவளைந்தான் - திருவரங்கத்திலுள்ளது ஒரு வீதியின் பெயர். பற்று
  - இடம்.

4. திருவாய். 8. 5 : 2.

5. திருவாய். 3. 1 : 9.