முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
178

நான்காந்திருவாய்மொழி - ‘அஞ்சிறைய’

முன்னுரை

    ஈடு : மேல் மூன்று திருவாய்மொழிகளால், இறைவனுடைய முதன்மையினையும் அவனை வழிபடுந்தன்மையினையும் அவனுடைய எளிமையினையும் அனுபவித்து மகிழ்ந்தவராய்த்தாமான தன்மையில் நின்று பேசினார்; இத்திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், 1ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது. 2‘இது மற்றொரு காரகம்’ என்னுமாறு போன்று, மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு. முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்று அற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன,’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத்திருவாய்மொழி வந்த அளவில், ‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; 3‘இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன், பார்க்கத் தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.

    மேல், 4‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப்

 

1. ஆற்றாமை - பி்ரிவுத்துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை.
  ‘ஆற்றாமையாவது, பிறிது எவ்வுணர்வும் இன்றி அவ்வாற்றாமை-தானேயாவது,’
  என்பர் களவியல் உரைகாரர்.

2. இது ‘மகாபாஷ்ய வாக்கியம்’ என்பர் அரும்பதவுரைகாரர். வேற்றுமைகள்
  வினை கொண்டு முடியின் அதனைக் ‘காரகம்’ என்பர். இங்கு,

  ‘லிளிகுறை இரண்டையும் விட்டவேற் றுமைகள்
  வினையான் முடியின் காரகம் எனப்பெறும்.
  குறையும் வினைகொளின் ஒரோவழிக் கூடும்.’

(சூ. 14.)

  என்ற இலக்கணக்கொத்து நினைவிற்கு வருகின்றது. இந்தவாக்கியம் மேற்கூறிய
  மூன்று திருப்பதிகங்கட்கு இத்திருப்பதிகம் நெறியால் வேறுபட்டது என்பதற்கு
  மேற்கோள். இதற்கு எடுத்துக்காட்டும் ஐதிஹ்யம் ‘முற்காலத்தில் சிற்றறிஞன்
  ஒருவன்’ என்று தொடங்கும் வாக்கியம்.

3. பிரஹதாரண்யம். 6. 5 : 6.

4. திருவாய். 1. 3 : 10.