முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
202

New Page 1

டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள். அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு அதனோடு 1மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும். ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக்கோடல் அன்பினாலே ஆதலின், ‘தான் நல்கிக்காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள். வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி. 2‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள். இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு, ‘பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று, 3யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்? நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று, தன்மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும், ‘வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ?’ என்பதற்கு, ‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

    நாரணனைக் கண்டக்கால்-உயிரக்கூட்டங்களினுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் தனக்கு அதீநமாய், இவை பிரகாரமாகத் தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தன் இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருது ஊதிக்

 

1. மேலே உள்ள ஆறு உலகங்கள்-புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம்,
  ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன.

2. ‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தை’ என்றது,
  ‘கடலிலே ஏற்றமிட்டு இறைத்தும் தண்ணீர் பெறாத ஒருவனைப் போன்று,
  சர்வ ரக்ஷகனைப் பற்றிவைத்தும் நான் விரும்பிய பொருள் கிடையாதபடியான
  பாவம்’ என்பது பொருளாம். இங்குத் தண்ணீரைப் போன்றது, ஜீவனம்.

3. ‘யார் இருந்து விரும்ப’ என்றது, ‘தான்’ என்ற சொல்லின் பொருள். ‘இதனை
  உண்டாக்கினான்’ என்றது, ‘நல்கி’ என்ற சொல்லின் பொருள். ‘நீறுபூத்த
  நெருப்புப்போன்று - தன் மேலேயேறிட்டுக் கொண்டு’ என்றது, ‘காத்து’ என்ற
  சொல்லின் பொருள். ‘நோக்கி அளிப்பவன்’ என்றது, ‘அளிக்கும்’ என்ற
  சொல்லின் பொருள்.