முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
203

New Page 1

கொண்டு திரிகிறவரைக் கண்டால், இங்கு, ‘இப்பெயர் 1காரண இடுகுறியோ!’ என்றிருந்தோம்; ‘கள்ளிச்செடிக்கு மஹா விருக்ஷம் என்று பெயர் இருப்பதைப் போன்றது ஒன்றோ!’ என்று கேளுங்கள் என்ற தொனிப்பொருளும் தோன்றும். மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே-பெருகாநின்றுள்ள நீரையுடைத்தான கொடித்தோட்டங்களிலே பேடையின் வாக்கு அடங்குவது தேடுகின்ற குருகே! கயல் உகளாநிற்கவும் பேடையின் வாய்க்கு அடங்குவது தேடுகின்றது ஆதலின்,’ ‘இரை தேர்’ என்கிறாள். 3‘புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடிதானே’ என்றார் திருமங்கை மன்னனும். இதனால், அதன் செயல் தனக்கு என வாழாமையாய் இருந்தது என்கிறாள். கைப்பட்ட இரையினைத் தன்மிடற்றுக்குக் கீழே இழித்தாது; ஆதலின், ‘வண்குருகே’ என்கிறாள். வண்மை-கொடுத்தல்; அழகுமாம். ‘நான் உண்ணாவிரதத்தோடு இங்கே தங்கியிருக்க, நினையாமல் இருக்கின்ற அவனைப் போல அல்லை நீ’ என்பது குறிப்பு. ‘காரிய காலத்தில் பூனையின் தன்மையினை அடைதல் வேண்டா; தூது போகையில் பயின்று இருப்பாரைப் போன்று இருக்கின்றாய்’ என்பாள், ‘சிறுகுருகே’ என்கிறாள்.

    மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்-‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள், ‘மல்குநீர்க் கண்ணேன்’ என்கிறாள். ‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின், இங்கும் 3சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும். இனி, தன்னைக் கண்ணநீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டியிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் எனினும் அமையும். ஆயின், நிரூபிப்பதற்குக் கண்ணநீர் எப்பொழுதும் இருக்குமோ?’ எனின் கலவியில் ஆனந்தக்கண்ணீரும், பிரிவில் சோகக்கண்ணீரும் மாறி மாறி இருக்கும். ‘மறுப்பரோ! என்னும் அச்சத்தால், நேரே உடம்பைத் தரவேண்டும் என்று சொல்லாளாகி, ‘வாசகங்கொண்டு’ என்கிறாள். மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது

 

1. காரண இடுகுறிப் பெயராவது - அவயவப்பொருள் நிறைந்ததாய் அச்சொல்லே
  அதற்கு அசாதாரணமான பெயராய் இருத்தல். கள்ளிக்கு மஹாவிருக்ஷம் என்ற
  பெயர் இடுகுறி.

2. பெரிய திருமொழி, 5. 1 : 2.

3. சேலும் கயலும் என்பன, மீன் விசேடங்கள். இங்குக் கண்களைக் குறிக்கிறாள்;
  ‘சேலேய் கண்ணியரும்,’ ‘கயலோ நும்கண்கள்’ என வருதல் காண்க.