முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
221

உரைத்த - நெஞ்சு பிணிப்புண்டு சொன்னவையாய் இருக்கை வாய்கை-கிட்டுகை. அதாவது, பாவபந்தத்தையுடையவராகை. அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின் வள உரையால் - எல்லையற்ற பெருமையையுடைய பரம்பொருளுக்கு வாசகமாகையாலே தாமும் எல்லையற்ற பெருமையையுடையனவாய், ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாதனவாய் இருக்கிற ஆயிரத்துள் இப்பத்தினுடைய நன்றான உரையாலே, வான் ஓங்கு பெருவளம் பெறலாகும் - பால் குடிக்க நோய் தீருமாறு போன்று, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம். அதாவது, ‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால், சம்சாரத்தில் குறைவான நிலைபோய், பரமபதத்தில் சென்று, தன் சொரூபத்தைப் பெற்று விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப்பெறலாம், என்றபடி.

   
முதற்பாட்டில், ஒரு நாரையைத் தூதுவிட்டாள்; இரண்டாம் பாட்டில், அங்குப் போனால் சொல்லும் வார்த்தைகளைச் சில குயில்களுக்குச் சொன்னாள்; மூன்றாம் பாட்டில், ‘நான் செய்த பாபமேயோ மாளாதது என்று சொல்லுங்கள்,’ என்று சில அன்னங்களை இரந்தாள்; நாலாம் பாட்டில், சில மகன்றில்களைப் பார்த்து, ‘என் நிலையை அங்கே சென்று சொல்லுவீர்களோ, மாட்டீர்களோ?’ என்றாள்; ஐந்தாம் பாட்டில், சில குயில்களைப் பார்த்து, ‘தன்னுடைய நாராயணன் என்ற பெயர் ஒறுவாய்ப் போகாமே நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்,’ என்றாள்; ஆறாம் பாட்டில், ஒரு வண்டைக் குறித்து, ‘தம்முடைய நாராயணன் என்ற பெயருக்கு ஒரு குறைவு வாராமே எங்கள் சத்தையும் கிடக்கும்படி இத்தெருவே எழுந்தருளச்சொல்,’ என்றாள்; ஏழாம் பாட்டில், ஒரு கிளியைக் குறித்து, ‘இத்தலையில் குற்றங்களைப் பார்க்கும் அத்தனையோ? தம்முடைய குற்றங்களைப் பொறுக்குந் தன்மையையும் ஒருகால் பார்க்கச்சொல்,’ என்றாள்; எட்டாம் பாட்டில், தான் உறாவினவாறே முன் கையிலிருந்த பூவையும் உறாவ, ‘நானோ முடியாநின்றேன்; நீ உன்னைக் காக்கின்றவரைத் தேடிக்கொள்’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில், ஒரு வாடையைக் குறித்து, ‘என் நிலையை அங்கே சென்று அறிவித்தால், அவன் ‘அவள் நமக்கு வேண்டா’ என்றானாகில், வந்து என்னை முடிக்க வேண்டும்,’ என்று இரந்தாள்; பத்தாம் பாட்டில், தன் நெஞ்சைக் குறித்து, ‘நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ