முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
224

ஐந

ஐந்தாந்திருவாய்மொழி - ‘வளவேழுலகு’

முன்னுரை

    முதல் திருவாய்மொழியால், ‘சர்வேஸ்வரன் எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு 1ஒரு குறை இல்லை,’ என்றார்; இரண்டாந்திருவாய்மொழியால், ‘அப்பற்றுதல்தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே கூடி அல்லது இராது,’ என்றார்; மூன்றாந்திருவாய்மொழியால், வழிபடுவார்க்காகத் தான் அவதரித்து எளியவனாய் இருக்கையாலே வழிபடத் தட்டு இல்லை,’ என்றார்; நான்காந்திருவாய்மொழியால் ‘எளியவன் ஆனவன் தான் குற்றங்களைப் பொறுப்பவன் ஆதலின், பலத்தோடே கூடியே இருப்பான்,’ என்றார்; ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக்கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால். ‘ஆயின், காதல் விஞ்சிக் கலங்கி மேல் திருவாய்மொழியில் தூது விட்டவர், இங்கு அகலுவான் என்?’ என்னில், கலங்கித் தூதுவிட்ட இடம் அன்பின் காரியம்; இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞானகாரியம். ‘ஆயின், இவ்விரண்டும் இவர்க்கு உண்டோ?’ எனின், இவர்க்கு இறைவன் திருவருள் புரிந்தது பத்தியின் நிலையினை அடைந்த ஞானத்தை ஆதலின், இரண்டும் உண்டு; ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பது இவருடைய திருவாக்கு.

    ‘இத்திருவாய்மொழியில் இறைவனுடைய சீலத்தை அருளிச் செய்தவாறு யாங்ஙனம்?’ எனின், மேல் திருவாய்மொழியில் தூது விடுகின்ற வியாஜத்தால் தம்முடைய ஆற்றாமையை அறிவித்த பின்னர், ‘இவரை இங்ஙனம் நோவுபட விட்டோமே!’ என்று பிற்பாட்டுக்கு நொந்து யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று, அரைகுலையத் தலைகுலைய வந்து தோன்றினான்; அவனுடைய வேறுபட்ட சிறப்பினையும் தம்முடைய தன்மையினையும்

 

1. ‘ஒரு குறையில்லை’ என்றது, ‘தொழுது ஏழு’ என்றதன் கருத்து.
  ‘புருடோத்தமன்’ என்றது, ‘பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்’
  என்றதன் கருத்து. ‘பலத்தோடே கூடியல்லது’ என்றது, ‘ஆக்கை விடும்
  பொழுது எண்ணே’ என்றதன் கருத்து. நான்காந் திருவாய்மொழியில்
  ‘பலத்தோடே கூடியே இருப்பான்’ என்றது, ‘ஏழுலகத்தவர் பெருமான்’
  என்றதன் கருத்து. ‘சீலவான்’ என்றது, ‘திருவடியால் தாயோன்’ என்றதனை
  நோக்கி. சீலத்தையுடையவன் சீலவான். சீலமாவது,  மாந்தர்களோடே
  புரையறக் கலக்கை.