முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
225

கண

கண்டார்; ‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியசூரிகளுக்கு நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார். ‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே. ‘ஆயின், அகலுவான் என்?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தத்தம் அழிவினைப்பாரார்கள் அன்றே? 1பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன, இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, 2‘அரசர்க்கு அரசரே, உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில், யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்? மேலும், 3இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல் இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ என்று விடை கொண்டாள் அன்றே 4பிராட்டி? அப்படியே, இவரும், 5‘ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும். நித்திய சூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப்புக்கார்.

    அதனைக் கண்ட இறைவன், ‘இவரை இழந்தோமே’ என்று நினைந்து, ‘ஆழ்வீர், அகலப் பார்த்திரோ?’ என்ன, ‘அடியேன் அகலப்பார்த்தேன்,’ என்ன, ‘நீர், எனக்குத் தாழ்வு வரும் என்று

 

1. பெருமாள்-ஸ்ரீராமபிரான். தேவதூதன்-பிரமன் ஏவலால் வந்த இயமன்.

2. ஸ்ரீராமா. உத்தர. 106 : 4.

3. ஸ்ரீராமா. உத்தர. 48 : 4.

4. ‘நான் உயிரை விட்டால் பெருமாளை உலகம் பழிக்கும்; பெருமாளுக்குப்
  பழியினை உண்டுபண்ணலாகாது என்று நான் பிழைத்திருக்கிறேன்,’
  என்பது கருத்து. இங்குப் பிழைத்திருத்தலே பிராட்டிக்கு அழிவு.

5. ஊருணி-குளம். ‘ஊரிலுள்ள மக்களால் தண்ணீர் உண்ணப்படுவது’ என்பது
  பொருள்.