முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
229

New Page 1

கைக்கு அடியான அன்பினை. ‘ஆயின், அன்பினை ‘அருவினை’ என்னலாமோ?’ எனின், ‘பாபம் என்பது, தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே, இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின் அன்பினை ‘அருவினை’ என்கிறார்.

    களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-‘களவு எல்லாரும் அறியும்படி வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த வஞ்சகனே!’ என்பன். எழுதல்-எல்லாரும் அறியும்படி வெளிப்படல். இனி, ‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம். இத்தால், ‘பரிவுடைய யசோதைப்பிராட்டி சொல்லும் பாசுரத்தை அன்றோ சொன்னேன்?’ என்கிறார். பின்னையும்-அதற்குமேல். தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் - ‘பரிவுடைய யசோதைப்பிராட்டிக்கு மறைத்தவற்றையும் வெளியிடும்படி அன்பிற்கு உரியவளான நப்பின்னைப்பிராட்டி பாசுரத்தையுஞ்சொன்னேன்,’ என்கிறார். தளவு ஏழ் முறுவல்-காட்டுப் பசுவினைக் கண்டவாறே வீட்டிலுள்ள பசு நினைவிற்கு வருதல் போன்று, நப்பின்னைப் பிராட்டியினுடைய பற்களின் வரிசையைக் கண்டவாறே முல்லை அரும்பு நினைவிற்கு வருதலின், ‘தளவேழ் முறுவல்’ என்கிறார். இனி, ‘தளவு எழும்படியான முறுவல்’ என்னவும் ஆம். அதாவது, எழுகை-போகையாய், தோற்றுப் போகும்படியான முறுவல். 1‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை’ என்றார் பிறரும். பின்னைக்காய்-நப்பின்னைப் பிராட்டியினுடைய புன்சிரிப்பிலே தோற்று அவள் விருப்பின்படி செய்து கோடற்குத் தன்னை அவளுக்கு உரிமையாக்கினான். வல் ஆன் ஆயர் தலைவனாய் - 2‘பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்தவர்கள்; அவனையே வலிமையாக உடையவர்கள்; அவனையே தலைவனாக உடையவர்கள்,’ என்பது போன்று, கிருஷ்ணனைத் துணையாகக்கொண்டு நாட்டினை அழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார். இனி, ‘ஆன் ஆயர் வலிய தலைவனாய்’ என்று, வன்மையைத் தலைவனுக்கு

 

1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்.
2. பாரதம், துரோணபர்வம், 183 : 24.