முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
232

நினைவின் வடிவமான ஞானத்தையுடைய உனது பெருமை மாசினை அடையாதோ?

    வி-கு :
‘உருகி ஏந்தி வணங்கினால் மாசூணாதோ?’ என்றும், ‘ஆய் சிதையாமே மனம்செய் ஞானம்’ என்றும் முடிக்க.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், தவறு செய்தேன்,’ என்றார் மேல் பாசுரத்தில்; ‘தவறு செய்தேன் என்ற இடம் தவறு,’ என்கிறார் இப்பாசுரத்தில்; ‘யாங்ஙனம்?’ எனின், சண்டாளன் ‘வேதம் போகாது’ என்றுதான் சொல்லப் பெறுவனோ? அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்? அன்பினால் நனைந்த மனத்தையுடைய பிரமன் முதலியவர்கள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்! ‘நான் தவறு செய்தேன்’ என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று, மேல் நின்ற நிலையையும் நிந்தித்துக்கொண்டு அகலுகிறார்.

    நினைந்து நைந்து வணங்கினால் - பிரமன் முதலிய தேவர்கள், திருவாராதனத்திற்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான உபகரணங்களைச் சமைத்துக்கொண்டாயிற்று இழிவது. நாம் இவற்றைக்கொண்டு சென்றால் நம்மைக் குளிர நோக்குவனே; 1‘ஸ்ரீ கிருஷ்ணர் என்னைப் பார்த்துக் ‘குற்றம் அற்ற அக்குரூரனே’ என்று அழைத்துப் பேசுவார்,’ என்று, கம்ஸன் ஏவலால் கிருஷ்ணனை அழைக்கச் சென்ற அக்குரூரன் நினைத்துச் சென்றது போன்று, ‘நம்மை வினவக்கடவனே’ என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள்; பின்னர், தரித்திருக்க மாட்டாதே கட்டுக்குலைந்த மனமுடையவர்கள் ஆவார்கள். உள் கரைந்து உருகி - நையுமது தூலம் என்னும்படி உள்கரைவர்கள்; பின்னர், ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாதபடி மங்குவார்கள். ‘இப்படிப் படுகின்றவர்கள்தாம் யார்?’ என்றால், இமையோர் பலரும் முனிவரும் - பிரமன் முதலான தேவர்களும், சனகன் முதலான முனிவர்களும், ‘ஆயின், இச்செயல் முனிவர்களுக்குப் பொருந்தும்; செருக்கினைக்கொண்ட தேவர்களுக்குப் பொருந்துமோ?’ எனின், இராசத தாமத குணங்களால் மேலிடப்பட்ட போது செருக்குக் கனத்து இருக்குமாறு போன்றே, சத்துவம் தலை எடுத்த போது பகவானுடைய குணங்களை அனுபவித்துக் கட்டுக்குலைந்து உருகுகிறபடியும் கனத்திருக்கும். புனைந்த கண்ணிநீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் - இப்படி அவர்கள் அன்பே மிக்கு

 

1. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17 : 12.