முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
274

இன

இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு இடையிலேயுள்ள நாள்கள் 1ஒருகடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள்கடல்’ என்கிறார். இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து 2பிறவிப் பெருங்கடலைக் கழித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.

(7)

 63

        கழிமின் தொண்டீர்கள் கழித்துத்
        தொழுமின் அவனைத் தொழுதால்
        வழிநின்ற வல்வினை மாள்வித்து
        அழிவின்றி ஆக்கம் தருமே.


    பொ-ரை :
அடியவர்களே, உலகப்பற்றினை நீக்குங்கள்; நீக்கி, இறைவனை வணங்குங்கள்; அவனை வணங்கினால், தொடர்ந்து வருகின்ற கொடிய வினைகளை எல்லாம் நீங்கச்செய்து, பின் மோக்ஷ உலகத்தில் செய்யப்படும் தொண்டாகிய செல்வத்தினை அழிவு இல்லாதபடி கொடுப்பான்.

    வி-கு : ‘தொழுதால், மாள்வித்து, ஆக்கத்தை அழிவின்றித் தரும்,’ என முடிக்க. ‘தரும்’ என்பது, செய்யுமென் முற்று.

    ஈடு : எட்டாம் பாட்டு. ‘சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரித்திரத்தை நினைத்து, மற்றைப் பொருள்களின் ஆசையை நீக்கவே, அவன் தானே தடைகளை எல்லாம் போக்கி நித்தியமான கைங்கரியத்தைத் தந்தருளுவான்,’ என்கிறார்.

    கழிமின் - புறப்பொருள்களிலுள்ள ருசியைக் கழியுங்கள். கழிக்கையாவது, ‘பொல்லாது’ என்று இருக்கை. தொண்டீர்-பகவத்விஷயத்தில் ஆசையுடையவர்களே, கழிக்கப் பாருங்கள். இந்த ருசியைப் பூண் கட்டிக்கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்கள் ஆதலின், ‘தொண்டீர் கழிமின்’ என்கிறார். கழித்துத் தொழுமின் - ‘அவனைத் தொழாநிற்கச் செய்தே இதுவும் முறையே கழிகிறது,’ என்று இராமல் அவசியம் கழித்தே தொழுங்கள். மற்றைப் பொருள்களின் விரக்திதானே பிரயோஜனமாக இருக்கும் ஆதலின், ‘கழிமின்’ என்றவர், மீண்டும், ‘கழித்து’

 

1. ‘காதலர் இருவர், ஒருவரை ஒருவர் பிரிந்திருக்குங் காலத்து ‘ஊழி பல ஓர்
  இரவு ஆயிற்றோ என்னும்’ (நளவெண்பா) என்பது போன்று கூறுங்கூற்றுகள்
  ஈண்டு நினைவு கூர்தல் தகும்.

2. ஈண்டு ‘நாள்’ என்றது - உபலக்ஷணத்தால் பிறவியைக் குறித்தது.