முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
328

யவன

யவனாய்க்கொண்டு தோன்றுவான் ஆதலின், ‘பொருசிறைப் புள்’ என்கிறார். இறைவனும் ‘நாம் இவனை மேற்கொள்ளப் பெற்றோமே!’ என்று திருவுள்ளத்தில் பிரீதியோடே மேற்கொள்ளுவான் ஆதலின், ‘உவந்து ஏறும்’ என்கிறார்.

    பூ மகளார் தனிக்கேள்வன்-மலரில் மணம் வடிவு கொண்டாற் போன்று இருப்பாராய், இன்ப வடிவினரான பெரிய பிராட்டியார்க்கு வல்லபன். என்றது, இப்படிப்பட்ட ஐஸ்வரியத்துக்கு 1இரண்டாம் விரலுக்கு ஆளில்லாதபடி இருக்கிறவன்’ என்றபடி. ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவு இலன்-அவர்களோடு பரிமாறுதலைப் போன்று 2ஒருவழியால் வந்த சுவையைத் தந்து விடுகின்றிலன்; என் அளவில் நித்தியசூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் விருப்பத்தை என் பக்கலில் பண்ணாநின்றான் என்பதாம். உடனே - 3‘இவன் ஒரு விபூதிமான், அந்யபரன்,’ என்று தோன்ற இருக்கின்றிலன் ஆதலின், ‘உடனே’ என ஏகாரங் கொடுத்து ஓதுகிறார். நித்தியவிபூதியில் கேள்வியும் இங்கே இருந்துகொண்டே செய்கிறான் என்றபடி. மேல் திருவாய்மொழியில் 4‘தண் தாமம் செய்து’ என்று நித்திய விபூதியில் செய்யும் விருப்பத்தைச் செய்தான் என்றார்; இத்திருப்பாசுரத்தில், அந்த மோட்ச உலகத்தில் உள்ளாரோடு பரிமாறும் படியை எல்லாம் என் ஒருவனோடு பரிமாறுகிறான் என்கிறார்.

(3)

92

        உடன் அமர் காதல் மகளிர்
            திருமகள் மண்மகள் ஆயர்
        மடமகள் என்றிவர் மூவர்
            ஆளும் உலகமும் மூன்றே
        உடன்அவை ஒக்க விழுங்கி
            ஆல்இலைச் சேர்ந்தவன் எம்மான்
        கடல்மலி மாயப் பெருமான்
            கண்ணன்என் ஒக்கலை யானே.


    பொ-ரை :
உடனே அமரவேண்டும்படியான காதலையுடைய மனைவிமார்கள் பெரிய பிராட்டியாரும் பூமிப்பிராட்டியாரும் இடையர்

 

1. 276-ஆம் பக்கத்தின் அடிக்குறிப்பைப் பார்க்க.
2. இப்பதிகத்தின் அவதாரிகையை நோக்குக.
3. விபூதிமான் - செல்வன். அந்யபரன் - வேறு ஒன்றிலே நோக்கமுடையவன்.
4. திருவாய். 1. 8 : 7.