முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
289

விரோதி தன்னடையே போய்க்கொண்டு நின்றவன் நான்,’ என்கிறார் இப்பாசுரத்தில்.

    ஆயர் கொழுந்தாய் - ஆயர்கட்குப் பிரதாநனாய் இருக்கும் இருப்பை அருளிச்செய்தார் மேல்; இங்கு, அவர்களில் ஒருவனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறார். அதாவது, அவர்கள் வேராகதான் கொழுந்தாய் இருக்குமவன் என்கிறார். இதனால், வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்படவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற்கண் வாடும் என்பதனைத் தெரிவித்தபடி. அவரால் புடை உண்ணும்-‘திருவாய்ப்பாடியில் உள்ள ஐந்து லட்சம் குடிகளிலும் ஸ்ரீ கிருஷ்ணனை நியமிக்க உரியர் அல்லாதார் இலர்’ என்பார், அவனால் அல்லது அவளால் என்று கூறாது, ‘அவரால்’ எனப் பன்மை வாசகத்தால் அருளிச்செய்கிறார். ‘மரத்தாலே ஓர் அடி அடிப்பார் போலேகாணும்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. மாயப் பிரானை - எல்லா விருப்பமும் முற்றுப்பெற்ற சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து, அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர்கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத் தலைக்கட்டமாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப்பிரானை’ என்கிறார்.

    என் மாணிக்கச் சோதியை-அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடையுண்ட மாணிக்கம் போன்று, திருமேனி புகர் பெற்று வருகிறபடி. ‘ஆயின், அடியுண்டால் புகர்பெறக் கூடுமோ?’ எனின், 1‘கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட வெட்டு என்று இருந்தான்’ என்கிறபடியே, ‘கட்டின அளவிற்கு 2வெட்டு என்று இருக்குமவன், கட்டி அடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்ல வேண்டுமோ?’ என்க. அப்புகரைத் தனக்கு 3முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’ என்கிறார். தூய அமுதைப் பருகிப் பருகி - தேவர்கள் அதிகாரிகளாய், பிரமசரியம் முதலிய நியமங்கள் வேண்டி, ஒவ்வொரு காலவிசேடங்களில் உண்ணக்கூடியதாய் இருக்கும் அவ்வமிர்தத்தைக்காட்டிலும், சர்வாதிகாரமுமாய், ஒரு நியதியும் வேண்டாமல் எப்பொழுதும் நுகரக்கூடியதாய் இருக்கும்

 

1. பெரிய திருமொழி, 5. 9 : 7.
2. வெட்டென்றிருக்கை - உகந்திருக்கை.
3. முற்றூட்டு - பூர்ண அனுபவமுள்ளது.