முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
303

    வி-கு : ‘வண்டு குடைந்து உண்ணும் துழாய்’ எனக் கூட்டுக. ‘உடைந்து’ என்னும் எச்சத்தை ‘ஓடுவிக்கும்’ என்பதன் முதனிலைத் தொழிலோடு முடிக்க. ‘இப்பத்து ஓடுவிக்கும்,’ என்க.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழிதானே இதனைக் கற்றவர்களுடைய பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை வேரோடு அழித்து விடும், என்கிறார்.

    குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை தேனைக்குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே இடங்கொண்டு குடித்தலை அன்றி, மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியையுடையவனை. அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் அம்மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத்விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச்செய்தார். மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்கும் - பகவத் அனுபவத்தால் உண்டான அன்பினால் பிறந்தவையாய் இருப்பினும் 1சொற்கள் தாம் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆகவேண்டும்’ என்று ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று மேல் விழுந்தன ஆதலின், ‘மிடைந்த சொல்’ என்கிறார். ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்களுக்குச் செல்வமும் கைவல்யமும் உறுதிப்பொருள் என்கைக்கு அடியான 1பாபங்கள் ஓடிப்போம். இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், 2‘வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர்போல் என்கிறபடியே, சிதறுண்டு தனித்தனியே ஓடச்செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’ அல்லாதனவாகக் கெடும் என்பார், ‘உடைந்த ஓடுவிக்கும், என்கின்றார் எனலுமாம்.

    முதற்பாட்டில், கேவலரை நிந்தித்தார்; இரண்டாம் பாட்டில் வேறு பயனைக் கருதாத அடியார்களிடத்தில் அவன் இருக்கும்படியை

 

1. ‘பாவங்களை ஒடுவிக்கும்’ என்ன வேண்டியவர், காரண காரிய
  உபசாரத்தாலே ‘நோய்களை ஒடுவிக்கும்’ என்கிறார்

2. பெரிய திருமொழி. 8. 10 : 7.