முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
312

கிறார்கள்’ என்கிற நித்தியசூரிகளைப் போன்று நானும் இதுவே தொழிலாக இருப்பன்.

(4)

82

        வைகலும் வெண்ணெய், கைகலந்து உண்டான்
        பொய்கல வாதுஎன், மெய்கலந் தானே.


    பொ-ரை :
‘நாள்தோறும் வெண்ணெயை இரண்டு கைகளாலும் கலந்து உண்டவனான எம்பெருமான், பொய் இல்லாதபடி என் சரீரத்தில் கலந்தான்,’ என்கிறார்.

    வி-கு : உண்டான் - பெயர். பொய்யான சரீரத்தை ‘மெய்’ என்றது - மங்கல வழக்கு.

    ஈடு :
ஐந்தாம்பாட்டு. 1‘நீர் அவன் நற்குணங்களைக் கற்றீராகில், அவன் தான் செய்கிறது என்?’ என்னில், ‘நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று, அவனும் என்னை விட்டு எனது சரீரத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.

    வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்-வெண்ணெயில் உண்டான ஆசையால் இடக்கையாலும் வலக்கையாலும் வாங்கி உண்டான். இனி, இதற்கு, 2‘தாரார் தடம் தோள்கள் உள்ளவுங்கைநீட்டி’ என்கிறபடியே, ‘கை நிறையுந்தனையும் வயிறு நிறையும்’ என்னும் இளம்பருவத்தின் தன்மையாலே திருக்கைகள் உள்ளளவும் கலந்து உண்டான் எனலும் ஆம். அன்றி, ‘கள்ளன்’ என்று 3சுலுகிட்டவாறே அவர்கள் தங்களோடே கலந்து உண்டான் என்று கூறலும் ஒன்று, ‘கற்பன் வைகலே’ என்கிறபடியே, எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருப்பது போன்று அவனுக்கும் அடியார்கள் தீண்டிய பொருள்கள் என்றும் ஒக்கத் தாரகமாக இருக்குமாதலின், ‘வைகலும்’ என்கிறார். ‘எல்லாரினும் அறப்பெரிய இறைவன், நித்திய சம்சாரியாகப் போந்த இவருடைய சரீரத்தைத் திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப் போன்று ஆதரித்தான் என்றால், இது பொருந்துமோ?’ என்னில், பொய் கலவாது என் மெய் கலந்தான்-‘அவ்வெண்ணெயில் செய்த விருப்பம் பொய் இல்லாதது போன்று, என் சரீரத்துடன் கலந்த கலவியிலும் பொய் இல்லை,’ என்கிறார். 4‘அழுக்குடம்பு’ என்று யான் வெறுக்கும்

 

1. ‘என் மெய் கலந்தானே’ என்றதனை நோக்கி அவதாரிகை.

2. சிறிய திருமடல், கண்ணி. 32.

3. சிலுகு - கலகம். ‘கைகலந்து’ என்பதற்கு, மூன்று பொருள் அருளிச்செய்கிறார்.
  மூன்றாவது பொருளில், கள்ளனுடைய ஆற்றல் பலனாம்.

4. திருவிருத்தம், 1.