முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
333

1

1‘இலங்கை செந்தீ உண்ணச் சிவந்து’ என்று சீற்றத்தைச் சிவப்பாக அருளிச்செய்தார் திருமங்கைமன்னனும். இனி, செக்கஞ்செக என்றது - செக்கச்சிவக்க என்றாய், ‘முலை கொடுத்த உபகாரத்தின் நினைவாலே திரு அதரத்தில் பழுப்புத் தோற்றப் புன்முறுவல் செய்த’ என்று பொருள் கோடலும் ஒன்று.

    அன்று-உலகமே அழியப்புக்க அன்று; இனி, இதற்கு ‘தனியிடத்தில் இவள் நலியப்புக்க அன்று’ என்று பொருள் கூறலும் ஆம். அவள்பால் உயிர் - அவளுடைய தாழ்ந்த சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர். பால்-ஏழனுருபு. செக-முடியும்படி. இனி, ‘அவள் பால் உயிர் செக’ என்பதற்கு, ‘அவள் பாலும் உயிரும் முடியும்படி என்று கோடலும் ஆம். 3‘முலையூடு உயிரை, வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே,’ என்றார் திருமங்கை மன்னனும். ‘முலை உண்டான்’ என்றால் ‘முலைப்பால் உண்டான்’ என்று பொருள் படுமாறு போன்று, ‘முலையூடு’ என்ற இடத்தும் ‘முலை’ என்றது முலைப்பாலை. உண்ட பெருமான் - 4‘முலையின் வழியே வருகின்ற விஷம் கலந்த பாலைக் குடித்து, அவளை முடித்து, உலகிற்கு எல்லாம் குருவாகிய தன்னைத் தந்தவன்’ என்கிறபடியே, அவள் முலை உண்டு அவளை முடித்து, உலகிற்கு ஒரு சேஷியைத் தந்தவன். நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஒக்கவும் தோற்றிய ஈசன் - தன் கூட்டத்துக்கும் உபகாரகனாய்ப் பிரசித்தனாய் இருக்கிற சிவனோடேகூட, அவனுக்கும் தந்தையான பிரமனும், அவனுக்கு இப்பால் உள்ள இந்திரன் தொடக்கமாக இங்கேயுள்ள எல்லாரையும், அத்திக்காயில் 5அறுமான் போன்று ஒன்றாக 6அரும்பிக்கும்படி பண்ணின சர்வேஸ்வரன். மாயன்-உண்டாக்கிய உலகத்திலே 7அநுப்பிரவேசம் முதலான ஆச்சரியமான செயல்களையுடையவன். என் நெஞ்சின் உளான் - என் சரீரத்தில் ஓரிடத்தைப்பற்றி நின்றான்.

(5)

 

1. பெரிய திருமொழி, 8. 6 : 6.

2. ‘செக்கம் செக’ என்ற இரண்டற்கும் சிவப்பு என்ற பொருளே கொண்டு
  ‘மிகவும் சிவக்க’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.

3. பெரிய திருமொழி, 1. 3 : 1.

4. ஸ்ரீ விஷ்ணு புரா.

5. அறுமான் - கொசுகு.

6. அரும்பிக்கும்படி - தளிர் வெடிக்கும்படி.

7. அநுப்பிரவேசம் - தொடர்ந்து புகுதல்.