முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
350

இல

இல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ்உலகும் தொழ’ என்கிறார். ஒரு - இவன் தானே இவ்வடிவை இன்னம் ஒருகால் கொள்ள வேண்டும் என்னிலும் வாயாதபடி இரண்டாவது இல்லாத தாய் இருக்கை மாணி-திருமகள் கேள்வன் என்று தோன்றாதபடி இரப்பிலே தழும்பு ஏறுகை. குறளாகி-கோடியைக் காணியாக்கியது போன்று, பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம்படி சுருக்கின படி. நிமிர்ந்த-அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி. வாசுதேவ தரு ஆதலின் ‘நிமிர்ந்த’ என்கிறார், நிமிர்ந்த அக்கருமாணிக்கம் - நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும் அளவிட்டு அறிய முடியாது இருத்தலின் ‘அக்கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார். என்கண் உளதாகும்-ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்; அவ்வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம். மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

(1)

101

        கண்ணுள் ளேநிற்கும் காதன்மை யால்தொழில்
        எண்ணி லும்வரும் என்இனி வேண்டுவம்
        மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
        விண்ணு மாய்விரி யும்எம்பி ரானையே.


    பொ-ரை :
பூமியும் தண்ணீரும் நெருப்பும் சிறந்த காற்றும் ஆகாயமும் ஆகிய இவற்றின் உருவமாக விரிகின்ற எம்பிரான், பரம பத்தியோடு வணங்கினால் வணங்குகிறவர்களுடைய கண்களிலேயே நிற்பான்; ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுமிடத்தும் வருவான்; இறைவன் தன்மை இதுவான பின்னர், நாம் அவனிடத்தில் இரந்து வேண்டும் குறை யாது உளது?

    வி-கு : ‘நிற்கும், வரும்’ என்பன, செய்யுமென் முற்றுகள். எம்பிரானை என்பது ‘எம்பிரான்’ என்னும் பொருட்டு; வேற்றுமை மயக்கம்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘பரமபத்திக்கும் 1பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.

    காதன்மையால் தொழில் கண்ணுளே நிற்கும் - பரம பத்தியுடையவர்களாகித் தொழுதால், அவர்கள் கண் வட்டத்துக்கு அவ்வருகு போகமாட்டாதே நிற்பான். தன்னை ஒழியச் செல்லா

 

1. பரிகணனை-அளவிடுதல்; எண்ணுதல்.