முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
360

    தாயும் தந்தையும் ஆய் - தாய் தந்தையர்களைப்போன்று அன்புள்ளவனாய். இவ்வுலகினில் வாயும் ஈசன் - அவர்கள் அளவு அன்றிக்கே, குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக்குதிக்கும் தாயைப் போலே, சம்சாரத்திலே ஒக்க விழுந்து எடுக்குமவன். ‘அடையத்தக்கவன் ஆகையாலே ‘இங்கு வந்து அவதரிக்கிறான்’ என்பார். ‘ஈசன்’ என்கிறார். இனி, ‘இங்கு வந்து அவதரித்து ஈர் அரசு தவிர்க்கையாலே ‘ஈசன்’ ஆனான்’ எனலுமாம். மணிவண்ணன் எந்தையே-தன் வடிவழகைக் காட்டி இவரை முறையிலே நிறுத்தினான். சிற்றின்பங்களில் விருப்புள்ளவர் ஆகாதபடி இவரை மீட்டு நன்னெறியில் நிறுத்துவதற்கு இறைவனுடைய வடிவழகு காரணமாய் இருந்ததாதலின், அதனை ‘மணிவண்ணன்’ என்ற சொல்லாற் குறித்தும், தன் சேஷித்துவத்தைக் காட்டி இவருடைய சேஷத்துவத்தை நிலை நிறுத்தினவன் ஆதலின், அவனை ‘எந்தையே’ என்ற சொல்லாற்குறித்தும் தெரிவிக்கிறார்.

(6)

106

        எந்தையே என்றும் எம்பெரு மான்என்றும்
        சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
        எந்தை எம்பெரு மான் என்று வானவர்
        சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.

    பொ-ரை :
‘எந்தையே! எம்பெருமானே!’ என்று நித்தியசூரிகள் தங்கள் மனத்திலே வைத்துத் துதிக்கும்படியான செல்வனை, மிக்க தீயவினைகளையுடைய யானும் ‘எந்தையே!’ என்றும், ‘எம்பெருமானே!’ என்றும் மனத்திலே வைத்துத் தியானிப்பேன், வாயாலும் சொல்லுவேன்; இஃது என்னே!’ என்பதாம்.

    வி-கு : எந்தை என்பது, என் தந்தை என்றதன் மரூஉ என்பர். வானவர் என்றது - நித்தியசூரியகளை.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது; ‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்.

    எந்தையே என்றும் - என்னிடத்தில் அன்புடையவனே என்றும். எம்பெருமான் என்றும் - எனக்கு வகுத்த சுவாமியே என்றும். சிந்தையுள் வைப்பன் - எத்தனை விஷயங்களை நினைத்துப் போந்த

 

1. ‘மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது’ என்றது, ‘துஞ்சும்போதும்
  விடாது தொடர்கண்டாய்’ என்றதனை நோக்கி.