முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
366

மன

மன்னினான்தன்னை - 1இப்படி இருக்கிற நான் நினைத்தேனாகவும் 2நினைவையும் என் தலையிலே ஏறிட்டு, ‘பிறந்த ஞானத்துக்குப் பிரிவு வர ஒண்ணாது’ என்று பார்த்து அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு, தன்னைப்பற்றி எனக்கு வரும் மறதி போம்படி என் மனத்திலே நித்தியவாசம் செய்கிறவனை. ‘புறம்பே வேறு ஒரு பொருளில் நோக்குள்ளவன்’ என்று தோற்ற இருந்திலன் ஆதலின், ‘மன்னினான்’ என்கிறார்.

    மறப்பனோ இனி யான் என் மணியையே-மறவாமைக்குக் கருவி அவன் கையிலே உண்டாய் இருக்க, இனி மறக்க உபாயம் உண்டோ? மேல் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாமல் கழிந்தமை போன்று, இனி மேல் வருகின்ற காலமும் மறக்க விரகு இல்லை என்பதனைத் தெரிவித்தபடி. 3‘மறந்தேன் உன்னை முன்னம்’ என்கிறபடியே, அநாதி காலம் மறந்தே போந்தவர் ஆதலின், அது தோன்ற ‘யான்’ என்கிறார். ‘பெருவிலையனாய் முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்து புகழையுடைத்தான நீலமணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்கியமாம்படி செய்துவைத்தான்,’ என்பார் ‘என் மணியை’ என்கிறார்.

(10)

110

        மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
        அணியைத் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
        பணிசெய் ஆயிரத் துள்இவை பத்துடன்
        தணிவி லர்கற்ப ரேல்கல்வி வாயுமே.

   
பொ-ரை : முன்றானையிலே முடிந்து ஆளலாம்படி சுலபனாய் இருக்கிறவனை, நித்தியசூரிகள் தலைவனை, தனக்குத்தானே ஆபரணம் போன்ற அழகினையுடையவனை, அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் சொற்களைக்கொண்டு அடிமை செய்யும் ஆயிரத் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவேண்டும் என்

 

1. ‘ஞானத்திலும் மறதியிலும் தமக்கு ஸ்வாதந்திரியம் இல்லை என்றவர்
  இப்பொழுது ‘மறக்கும்’ என்றல் பொருந்துமோ?’ என்னும் வினாவிற்கு
  விடையாக ‘இப்படியிருக்கிற நான்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. ‘நினைவையும் என் தலையிலே ஏறிட்டு’ என்றதனால் ‘மறப்பையும் என்
  தலையிலே ஏறிட்டான்’ என்பது பெறுதும்.

3. பெரிய திருமொழி, 6, 2 : 2.