முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
19

New Page 1

தென்னா என்னும் என் அம்மான்’ என்றும் சொல்லுகிறபடி இப்படியே தம்முடைய நன்மை எங்கும் உண்டான எல்லார்க்கும் உண்டாம்படி செய்துகொண்டிருப்பர்.1

    2
‘ஸ்ரீ ராமபிரானுடைய நகையினையும் பேச்சையும் நடையினையும் செயல்களையும் மற்றும் உண்டான எல்லாவற்றையும் என் சங்கற்பத்தால் அருளப்பெற்ற தவ வலிமையால் உண்மையாக நன்கு அறிவாய்,’ என்கிறபடியே, பிரமனுடைய திரு அருளால் ஸ்ரீ வான்மீகி பகவான் எல்லாவற்றையும் அறிந்தது போன்று, இவரும் பகவானுடைய 3சொரூப ரூப குண விபூதிகளைப் பகவானுடைய திருவருளால் அறிந்தவராய் இருப்பர். 4‘ஐஸ்வரியம் ஆத்மலாபம் ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம். அவற்றை நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்; ஞானியானவன் எனக்குத் தாரகன்,’ என்று சர்வேஸ்வரன் அருளிச்செய்த ஞானிகளுக்கு முதன்மை பெற்றவராய் இருப்பர்.

    5
‘கைங்கர்யத்தை வளர்த்துப் போருமவனான இலக்குமணன் இளமைப்பருவம் தொடங்கி ஸ்ரீ ராமபிரானிடத்தில் பரம சிநேகிதனாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, இளமைப்பருவந்தொடங்கிப் 6பெருமாள் திருத்தொட்டிலோடு அணையத் திருத்தொட்டில் இடாதபோது பள்ளி கொள்ளாத 7இளைய பெருமாளைப் போன்று, 8‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’

 

1. ஆக, ‘திருமகள் கேள்வனாய்’ என்று தொடங்கி, ‘இவ்வாழ்வார்’
  என்னுமளவும், இப்பிரபந்தம் தத்துவஞானம் அடியாகப் பிறந்தது
  என்பதனையும், புகழ் பொருள் பூசை இவைகள் காரணமாகப் பிறந்தது அன்று
  என்பதனையும் அருளிச்செய்து, பிரபந்தம் எல்லாராலும் ஏற்றுக்
  கொள்ளத்தக்கது என்பதனை அறுதியிட்டு, ‘இப்படியிருக்கிற’ என்று தொடங்கி
  ‘உண்டாம்படி செய்துகொண்டிருப்பர்’ என்றது முடிய, எல்லா ஆத்துமாக்களும்
  உய்வதற்கு வழியாக இருக்கின்றது இப்பிரபந்தம் என்பதனை அறுதியிட்டார்.

2. இனி, முதல் வாக்கியத்தால் அருளிச்செய்த ஞான பத்தி வைபவத்தை
  இப்பிரபந்தம் மூலமாக விரித்து அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ ராமபிரானுடைய
  நகையினையும்’ என்று தொடங்கி. இது ஸ்ரீராமா. பால. 3 : 4.

3. சொரூப ரூப குண விபூதி - இறைவனுடைய தன்மை, உருவம், குணம், உலகம்
  ஆகிய செல்வங்கள்.

4. ஸ்ரீகீதை. 7 : 18.

5. ஸ்ரீராமா. பால. 18 : 27.

6. பெருமாள் - ஸ்ரீராமபிரான்.

7. இளைய பெருமாள் - இலக்குமணன்.

8. திருவாய்மொழி, 2. 3: 3.