முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
20

என

என்றும், 1‘முலையோ முழுமுற்றும் போந்தில பெருமான், மலயோதிருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே,’ என்றும் சொல்லுகிறபடியே, இவரும் பருவம் நிரம்புவதற்கு முன்பே பகவானுடைய குணங்களையே தாரகமாகக் கொண்டிருப்பர். 2‘தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன், நீர் நசை அறும் அளவும் பிழைத்து இருக்குமாறு போன்று, நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திருவுள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவுங்காணும் நாங்கள் பிழைப்பது; ஆதலால், உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இலள்; யானும் இலன்; பிழைத்து இருப்போமாயின், ஒரு முகூர்த்த நேரமே பிழைத்திருப்போம்,’ என்றார் இளைய பெருமாள். 3‘எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போதும் ஒழியும்’ என்கிறபடியே, அத்தலையில் (இறைவன்) நினைவாலே அன்றே இத்தலை (உயிர்கள்) பிழைத்திருப்பது? அவன் நினைவு இல்லாத அன்று இவையும் இல்லை அன்றே? அப்படியே, இவரும் 4‘நின் அலால் இலேன்காண்’ என்று இருப்பார் ஒருவர். 5‘வானவர் நாடு. என்கிற பரமபதம், ஆத்மலாபம், உலகங்களின் ஐஸ்வரியம் இவை இத்தனையும், உமக்குப் புறம்பாக வரும் அன்று வேண்டேன்,’ என்ற இளைய பெருமாளைப் போன்று, இவரும் 6‘திருவொடு மருவிய, இயற்கை மாயாப் பெருவிறல் உலக, மூன்றினொடு நல்வீடு பெறினும், கொள்வது எண்ணுமோ?’ என்றும், 7‘எம்மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றும், 8‘பாவியேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ?’ என்றும் மற்றைப் புருஷார்த்தங்களைப் பற்றிப் பேசும் போதில்தானே

 

1. திருவிருத்தம், 60.

2. ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

3. இவ்வாழ்வார், பத்தியினால் இறைவனையே தாரகமாகக்கொண்டிருப்பவர்
  மாத்திரமல்லர்; தத்துவ ஸ்திதியும் அப்படியே என்கிறார், ‘எத்தேவர்
  வாலாட்டும்’ என்று தொடங்கி. இது, நான்முகன் திரு. 38. 

4. திருவாய்மொழி, 2. 3: 7.

5. ஸ்ரீராமா, அயோத். 31 : 5.  ‘வானவர் நாடு’ என்பது, திருவாய். 3. 9: 9.

6. திருவாசிரியம், 2.

7. திருவாய்மொழி, 2. 9: 1.

8. திருவாய்மொழி, 9. 6: 9.