முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
22

New Page 1

பொருந்துமோ?’ எனின், 1‘அறத்தின் உருவமாயும் சத்தியம் ஒழுக்கம் முதலியவற்றிற்குக் கொள்கலமாயும் சாதுக்களுக்கு எல்லாம் உவமானமாகச் சொல்லத் தக்கவனாயும் எவனொரு பிரகலாதன் இருந்தான்’ என்று பிரகலாதனைச் சாதுக்களுக்கு எல்லாம் உவமைக்கு எல்லையாகச் சொல்லுவது போன்று, இவரும் தம்முடைய ஒவ்வொரு வகையாலே எல்லார்க்கும் உவமை சொல்லத் தக்கவராக இருப்பர் என்பதனைத் தெரிவித்தபடி.

    2
‘நான் பின் பிறந்த தம்பி; அவருடைய குணங்களால் அடிமையை அடைந்துள்ளேன்.’ என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போன்று, இவரும் பகவானுடைய குணங்களிலே தோற்று. 3‘உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே,’ என்கிறார்.

    இப்படிப் பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை 4விசத விசததர விசததமமாக அநுபவித்து அவ்வநுபவம் உள் அடங்காமை வழிந்து புறப்பட்ட சொற்கள் ஆம், இப்பிரபந்தங்கள்.

    ‘இங்ஙனம் ஆயின், இப்பிரபந்தங்கள் 5‘எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ இவற்றோடு கூடிய பாவும் பா இனங்களுமாக அமைந்த வகை யாங்ஙனம்?’ எனில், பகவானுடைய திருவருள் அடியாகப் பிறந்த பிரபந்தங்கள் இவை ஆதலின், இவற்றில் கூடாதன

 

1. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 15 : 15.

2. ஸ்ரீராமா கிஷ். 4 : 12.

3. திருவாய்மொழி, 1. 1 : 1.

4. விசத விசததர விசததமம் - பரபத்தி பரஞான பரமபத்திகள். விசதம் -
  தெளிவு; விசததரம் - மிக்க தெளிவு; விசததமம் - நனிமிகு தெளிவு. பரபத்தி -
  சேர்க்கையில் சுகமும் பிரிவில் துன்பமும், பரஞானம் - தெளிவாக நேரே
  அறிதல்; பரமபத்தி - பிரிவில் இருப்பிற்கே கேடு உண்டாதல். ஆக, விசதம்
  முதலானவைகள், பரபத்தி முதலானவைகளின் காரியங்கள். ஆதலால், பரபத்தி
  பரஞானம் பரமபத்தி இவைகளால் அநுபவித்ததை, ‘விசத விசததர
  விசததமமாக அநுபவித்து’ என்கிறார்.

5. ‘எந்தம் அடிகள் இணையடி எத்தி எழுத்து அசை சீர், பந்தம் அடி தொடை
   பா இனங் கூறுவன்,’ என்பது யாப்பருங்கலக்காரிகை, 1.