முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
23

இல

இல்லை. சோக வேகத்தாலே பிறந்த 1‘மா நிஷாத’ என்னும் சுலோகமானது 2‘மச்சந்தாதேவ’ என்னும் சுலோகத்தின்படியே, அத்திக்காயில் அறுமான் போன்று, பகவானுடைய விபூதியில் ஒரு கூறனான பிரமனது திருவருளால் எல்லா இலக்கணங்களும் அமைந்த ஸ்ரீ ராமாயணமாகத் தோன்றியதை ஈண்டு நினைவு கூர்க.

    ‘நன்று; உலகத்துப் பல திறப்பட்ட நூல்களுள், இவை எவ்வினத்தைச் சார்ந்தவை? இவை பிறந்தபடி யாங்ஙனம்? இவற்றுக்கு மூலம் யாது? ஒன்றை மூலமாகக் கூறின், அதுவே மூலம் என்று அறியும்படி எங்ஙனம்? இவை பிரமாணம் என்று அறிவது எதனால்? இவற்றில் கூறப்படும் தலைவன் யாவன்? இவற்றைக் கற்கைக்கு அதிகாரிகள் யாவர்? இவற்றிக்குப் 3போக்தாக்கள் யாவர்? இவை எதற்காகச் செய்யப்பட்டன?’ என்று கல்வி அறிவு இல்லாதார் சிலர்

 

1. மா நிஷாத பிரதிஷ்டாம் த்வமாகம: ஸாஸ்வதீ: ஸமா:
  யத் க்ரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காமமோஹிதம்.

      (இ - ள்.) ‘நிஷாத - ஓ வேடனே, த்வம் - நீ, யத் - யாதொரு
  காரணத்தால், கிரௌஞ்ச மிதுநாத் - இரண்டாகக் கூடியிருந்த அன்றிற்
  பறவைகளில், காமமோஹிதம் - காமத்தால் மோகத்தையடைந்த, ஏகம் - ஓர்
  ஆண் பறவையை, அவதீ: - கொன்றாயோ, (அதனால்) ஸாஸ்வதீ: -
  நிலைத்திருக்கிற, ஸமா: - வருஷங்களில் பிரதிஷ்டாம் - இருப்பை, மாகம: -
  அடையமாட்டாய்’ என்றவாறு.

      இச்சுலோகத்திற்கு உட்பொருள் : ‘மா நிஷாத - ஸ்ரீநிவாசனே, த்வம் - நீ,
  யத் - யாதொரு காரணத்தால், கிரௌஞ்ச மிதுநாத் - இருவராகக் கூடியிருந்த
  இராக்கதர்களான இராவண மண்டோதரி என்னும் இவர்களில், காம
  மோஹிதம் - ஆசையால் பீடிக்கப்பட்ட, ஏகம் - ஒருவனை (இராவணணை),
  அவதீ: - கொன்றாயோ, (அதனால்) ஸாஸ்வதீ: ஸமா: - நிலைத்துள்ள
  வருஷங்களில், பிரதிஷ்டாம் - இருப்பை, அகம: - அடையக்கடவாய்’ என்பது.

2. மச்சந்தா தேவ தே ப்ரஹமந் ப்ரவ்ருத்தேயம் ஸாஸ்வதீ
  ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ருஷிஸத்தம.

      ஹே பிரஹமந் - ஓ முனிவனே, இயம் ஸாஸ்வதீ - ‘மாநிஷாத’ என்னும்
  இந்தச்சுலோகமானது, மசசந்தா தேவ - என்னுடைய திருவருளால்,
  தேப்ரவிருத்தா - உனக்கு உண்டாயிற்று, ஹே ருஷி ஸத்தம -
  முனிபுங்கவனே, த்வம் - நீ, ஸர்வம் ராம சரிதம் - இராமசரிதம்
  எல்லாவற்றையும், குரு - செய்வாய்.

3. போக்தாக்கள் - சப்த அர்த்த ரசிகர்கள் ‘கேட்டு ஆரார் வாளவர்கள்’
  (10.  6 : 11.) என்றும், ‘தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்மாலைகள்
  சொன்னேன், அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ (9. 4 : 9.) என்றும்
  சொல்லுகையாலே, போக்கியதா புத்தியால் இழிந்து போக்தாக்களாய்
  இருக்குமவர்களையும் தனியே அருளிச்செய்கிறார்.