முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
311

இறைவன் இரண்டு உலகத்தில் உள்ளார்க்கும் முகம் கொடுக்க வந்து நின்றானேயாகிலும், திருமலைதான் நித்தியசூரிகளுடையது என்றபடி.

(3)

81

        வெற்பை ஒன்றுஎடுத்து, ஒற்கம் இன்றியே
        நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே.


    பொ-ரை :
கோவர்த்தனம் என்ற ஒரு மலையை எடுத்துத் தளர்ச்சியின்றியே நின்றுகொண்டிருந்த இறைவனுடைய நற்குணங்களை நாள்தோறும் சொல்லுவன்.

    வி-கு : ஒற்கம் - தளர்ச்சி. வைகல் - நாள் ‘எடுத்து நிற்கும் அம்மான்’ எனக் கூட்டுக.

    ஈடு : நான்காம் பாட்டு. அவனுடைய 1ஆர்ஜவகுணம் அளவிலே பலித்தபடியை அருளிச்செய்கிறார்.

    வெற்பை ஒன்று எடுத்து - பசுக்களும் ஆயரும் வருந்தும்படி மழை பெய்யப் புக்கவாறே, அதற்கு ஈடாய் இருப்பது ஒன்றை இட்டுக் காக்கப் பற்றாமையாலே, தோற்றிற்று ஒரு மலையை எடுத்துத் துயரை நீக்கினான். ‘இப்படி ஏழு வயதுடைய பாலன் ஒருபடிப்பட மலையை எடுத்துத் தரித்துக்கொண்டு நின்ற அளவில், இளைப்பு உண்டாயிற்று இல்லையோ?’ என்னில், ஒற்கம் இன்றியே நிற்கும் - ஒற்கமாவது, ஒடுங்குதல்; அதாவது, இளைப்பு ‘ஏழு நாள் ஒரு படிப்பட மலையைத் தரித்துக்கொண்டு நின்ற இடத்தில் இளையாமைக்குக் காரணம் யாது?’ என்னில், அம்மான் - வகுத்த ஸ்வாமி ஆகையாலே, இயல்பாகவே அமைந்த சம்பந்தத்தால் இளைப்பு இன்றியே இருந்தான். அதாவது, ‘குழந்தையைப் பாதுகாப்பதில் தாய்க்கு இளைப்பு உண்டாகாது அன்றே?’ என்றபடி. சீர் கற்பன்-அவன் மலையை எடுத்துக் காப்பாற்றத் தக்க பொருள்களை நோக்கின நேர்மையை நினைத்து, 2‘குணங்களால் அடிமைப்பட்டேன்’ என்று இளையபெருமாள் கூறியது போன்று, அவனுடைய நற்குணங்களை அந்த நற்குணங்களாலே தூண்டப்பட்டவனாகிச் சொல்லுவன். வைகலே-ஒருகால் இதனைச் சொல்லி, பின்னர் என் காரியத்திற்குப் போமவன் அல்லேன்; 3‘எப்பொழுதும் துதித்துக்கொண்டிருக்

 

1. தாம், வெற்பை எடுத்த சீரைக் கற்கைக்காக, இறைவன் வெற்பை எடுத்தான்
  என்னும் இவ்வழியாலே இங்கு ஆர்ஜவ குணம் சொல்லிற்றாகிறது.

2. ஸ்ரீ ராமா. அயோத். 3 : 19.

3. இருக்கு வேதம்