முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
64

பரம

பரம்பொருள் தனது நிர்ஹேதுக கிருபையால் எப்பொழுது எவனைப் பார்க்கின்றானோ, அப்பொழுது அவன் சோகம் நீங்கினவன் ஆகின்றான்,’ என்று உபநிடதம் புகலும். ‘ஆயின், இத்தலையில் நினைவு இன்றியே இருக்கவும், வந்து அருளினன் தன் அருள் கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில், அயர்வு அறும் அமரர்கள் அதிபதி - தான் அருளாத அன்று 1சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன். அயர்வாவது, மறதி. அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள். அவர்கள், நித்தியர்கள். 2மறதி இருந்து பின் நீங்கினவர்கள், முத்தர்கள். அவரின் வேறுபட்டவர்கள் இவர்கள். ஈண்டு ‘அமரர்கள்’ என்றது, கேவலம் மரணம் இல்லாதவர்கள் என்பதனைக் குறிக்க வந்தது அன்று; பகவானுடைய அநுபவம் தடைபடுமேயானால், அப்பொழுது தங்களை உள்ளவர்களாகக் கருதாதவர்கள் என்பதனைத் தெரிவிக்க வந்தது. அதாவது, பிரிவில் தரியாதவர்கள் என்றபடி. 3‘இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்; நானும் பிழைக்க மாட்டேன்,’ என்பது இளைய பெருமாள் திருவார்த்தை. ‘அமரர்கள்’ என்பதில் ‘கள்’ விகுதிமேல் விகுதி, சத்தியலோகம் முடிவாக உள்ள இவ்வுலகங்கள் எல்லாம் காற்பங்காகவும், மோக்ஷ உலகம் முக்காற்பங்காகவும் உள்ள பெருமையினைக் குறிக்க வந்தது.

    மோக்ஷ உலகத்திலிருப்பவர்கள் எல்லாவகையாலும் இறைவனை ஒத்திருப்பவர்களாய் இருக்கையாலே, ஓலக்கம் இருக்குங்காலத்திலே தான் அவர்களுக்கும் அவனுக்கும் வாசி அறியலாமாதலின், ‘அமரர்கள் அதிபதி’ என்கிறார். ‘ஆயின், ஓலக்கம் இராத காலத்தில் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், பிராட்டி மாராலேயாதல், ஸ்ரீ கௌஸ்துபம் முதலியவைகளாலேயாதல் சேஷி என்று அறியுமத்தனை. ‘ஆயின், இப்படி இருக்கிற இவர்கள் பலராகத் தான் ஒருவனாக இப்பதனால், இவர்களைப் பின் பற்றிக்கொண்டு தன்னுடைய 4சேஷியாந்தன்மை ஆகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில், அதிபதி - அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’

 

1. சத்தையின்றிக்கேயிருப்பார் - நித்தியசூரிகள். ‘ஒரு நாடு’ என்றது, ஈண்டுப்
  பரமபதத்தைக் குறித்தது.

2. நித்தியர்கள் எப்பொழுதும் மறதியில்லாதவர்கள்; ‘அயர்வறும்’ என்பது
  எப்பொழுதும் மறதியின்மையினைக் குறிக்கவந்த இயற்கையடை.

3. ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

4. சேஷி - தலைவன்; இறைவன்.