முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
43

அங

அங்கே திரிகின்ற மீன்கள் சிலவற்றைக் கண்டு சிற்றின்பத்தில் அன்பு உள்ளவன் ஆனான்; ஆகையாலே, விடுகின்ற வகை இவையல்ல; ‘ஆயின், மற்று என்னை?’ எனின், 1‘நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின்,’ என்று தேகத்தை ஆன்மா என்று கருதும் அறிவையும், தேகத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்ற பொருள்களில் எனது என்னும் அறிவையும் தவிர்தல் விடுகின்ற வகை என்று பிறர்க்கு உபதேசித்தார்.; 2‘யானே என்னை அறியகிலாதே, யானே என்றனதே என்று இருந்தேன்’ என்று தாமும் சொல்லிப் போந்தார். ஆகவே, 3‘ஆசை இல்லாதவனுக்குத் தான் வசிக்கும் வீடே தவம் செய்வதற்கு உரிய வனமாம்,’ என்கிறபடியே, ஆசை நீக்கியவனுக்குத் தான் இருந்த தேசமே தவம் செய்வதற்கு ஏகாந்தத் தலம் என்பது போதரும். ‘இதனை எங்கே கண்டோம்?’ என்னில், 4ஸ்ரீசனகராசன் பக்கலிலும், ஸ்ரீகுலசேகரப் பெருமாள் பக்கலிலும் கண்டுகொள்வது. ஆகையால், புத்தித் தியாகமே தியாகம் என்றபடி.

    5
‘இவ்விரோதியைக் கழிப்பதற்கும் புருஷார்த்தம் கைகூடுவதற்கும் உபாயம் எது?’
என்னில், மூன்று வருணத்தார் மேற்கொள்ளக்கூடிய பத்தியும், ஒரு கதியும் இல்லாதவன் மேற்கொள்ளக் கூடிய பிரபத்தியும் என்னும் இரண்டு வழிகள் அன்றோ வேதாந்தங்களிற் பெறப்படும் உபாயம்? இவற்றுள், பிரபத்தியே உபாயம் என்று தமக்குச் சிந்தாந்தம் என்னும் ஆகாரம் தோற்ற உபாயத்தின் தன்மையினை அருளிச்செய்தார். ‘யாங்ஙனம்?’ எனின், 6‘நோற்ற நோன்பு இலேன்’ என்று தொடங்கி, 7‘ஆறு எனக்கு

 

1. திருவாய். 1. 2 : 3.

2. திருவாய். 2. 9 : 9.

3. இதிகாச சமுச்சயம்

4. ஸ்ரீஜனகராஜன் - மிதிலா நகரத்தரசன்; சீதா பிராட்டியின் தமப்பன்;
  தத்துவஞானி; இருவகைப் பற்றுகளையும் அறவே விட்டவன். குலசேகரப்
  பெருமாள் - குலசேகர ஆழ்வார்; சேரநாட்டு அரசர், அரசராயினும்,
  பற்றற்றவர். ‘பேயரே எனக்கு யாவரும் யானுமோர், பேயனே எவர்க்கும்
  இது பேசி என்?’ ‘ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ, வானாளும்
  செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்’ என்பன இவருடைய
  திருவாக்குகள்.

5. உபாய சொரூபத்தை அருளிச்செய்கிறார், ‘மூன்று வருணத்தார்’ என்றது
  முதல், ‘எல்லாவற்றையும் தரவல்ல உபாயம் என்பதனையும் அருளிச்செய்தார்’
  என்றது முடிய.

6. திருவாய். 5. 7 : 1.

7. திருவாய். 5. 7 : 10.