முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
47

என

என்கையாலே அவனே வர்த்தகன் என்பதனையும் அருளிச்செய்து, ‘வளர்வதற்கு எல்லை ஏது?’ என்னில், 1அதனில் பெரிய என் அவா’ என்கையாலே தத்துவத் திரயங்களையும் விளாக்குலை கொள்ளும்படி பெருகினபடியை அருளிச்செய்து, 2‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று தம் திருவாயாலே அருளிச்செய்கையாலே சரீர சம்பந்தத்தை அறுத்துத் தேச விசேஷத்திலே கொண்டு போய்த் தன திருவடிகளிலே சேர்ப்பித்துத் தலைக்கட்டினான் என்பதனை அருளிச்செய்தார்.

    ஆக, இவ்வைம்பொருள்களுமே திருவாய்மொழியால் சொல்லப்படுகின்றன. அல்லாதவை 3ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன இத்தனை. ‘யங்ஙனம்?’ என்னில், பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன் என்றும், அநந்யார்ஹ சேஷத்துவமே சொரூபம் என்றும், இறைவனுடைய குணங்களை அநுபவிப்பதால் உண்டாகும் பிரீதியால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்றும், அகங்காரமமகாரங்கள் அதற்கு விரோதி என்றும், அவை நீங்குதற்கும் கைங்கரிய சித்திக்கும் சர்வ சுலபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும், ஐம்பொறிகளையும் அடக்கல் தொடக்கமாகக் கைங்கரியம் முடிவாக உள்ளவை அவ்வுபாயத்திற்குப் பலம் என்றும் சொல்லப்பட்டன.

    4
‘அடையத் தகுந்த பரம்பொருளின் சொரூபத்தையும், அடைகின்ற ஆத்துமாவின் சொரூபத்தையும், அடையும் உபாயத்தையும், அடைவதற்குப் பலத்தையும், அப்படியே அடைவதற்கு விரோதியையும் இதிகாச புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் கூறுகின்றன; மகாத்துமாக்களும் வேதங்கள் வேதங்களின் பொருள்கள் இவற்றை அறிந்தவர்களுமான முனிவர்களும் சொல்லுகிறார்கள்,’ என்பதை விவரிக்கும் முறையில் எல்லா வேதங்களினுடைய கருத்து இவ்வைம்பொருள்களுமே என்றும், இவ்வைம்பொருள்களும் திருவாய்மொழிக்கு வாக்கியார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரியவங்கிப் புரத்து நம்பி அருளிச்செய்தார்.

 

1. திருவாய். 10. 10 : 10. தத்துவத் திரயங்கள் - சித்து, அசித்து, ஈஸ்வரன்.
  விளாக்குலை கொள்ளுதல் - தனக்குள் அடங்கும்படி செய்தல்.

2. திருவாய். 10. 10 : 10.

3. ‘ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன’ என்றது, ‘இடையிலே வந்தவை’ என்றபடி.

4. ‘திருவாய்மொழியில் கூறப்படும் பொருள், ஐம்பொருள்களுமே’ என்பதற்குப்
  பெரியவங்கிப்புரத்து நம்பியின் கூற்றை மேற்கோளாகக் காட்டுகிறார்,
  ‘அடையத்தகுந்த பரம்பொருளின் சொரூபத்தையும்’ என்று தொடங்கி.