New Page 1
குணம் ஒன்றனையே
சொல்லுகிறது. அன்றி, குணங்களின் தொகுதியினைச் சொல்லுகிறது என்றும், ஆனந்தம் உண்டாவதற்குக்
காரணமான 1விபூதிகளைச் சொல்லுகிறது என்றும் கோடலும் பொருந்தும். உடையவன் - இக்குணங்களை
உள்ளவை என்று கூறுதலோடு அமையாது, இவற்றைக் கொண்டு நிரூபிக்கவேண்டும்படியாக இருப்பவன். இதனால்,
இக்குணங்கள் இடையில் தோன்றியவையல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாய் இருப்பன என்பதனைத்
தெரிவித்தபடி 2ஆழ்வான், பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க்குணம்
என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று
பணித்தான். 3‘அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்’;
4‘எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து
பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;’ 5‘மகாத்துமாவாகிய ஸ்ரீ
ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும்
இருப்பிடமாய் இருக்கின்றான்’; 6‘அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள்
இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும். 7‘இயற்கையில் அமைந்தனவாய்,
எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’
என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
‘இப்படி, குணங்கள்
கரை புரண்டு இருந்தால் இக்குணங்களாலே தனக்கு நிறமாகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில்,
அங்ஙன் இரான்; தன்னைப் பற்றிக் குணங்கள் நிறம் பெறவேண்டும்படி இருக்கின்றான் இறைவன் என்பதனை
அருளிச் செய்கிறார் ‘யவன்’ என்ற சொல்லால். 8’உப்புக்கட்டி உள்ளும்
புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’ என்ற
பிரசித்தமான பிரமா
1.
விபூதி - உலகம்.
2. ஆழ்வான் - கூரத்தாழ்வான்.
3. ஸ்ரீ
விஷ்ணுபு. 6. 5 : 84.
4.
வியாசபார. வீடுமபருவம்.
5. ஸ்ரீ
ராமா. கிஷ். 15 : 20.
6.
ஸ்ரீ ராமா. அயோத். 2 : 26.
7.
ஸ்தோத்திரரத்தினம். 11.
8.
பிரஹதா. உபரி. 6. 5 : 23.
|