முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
72

நலம

நலம் என்பதற்கு, நேருக்கு நேராகத் தன்னை அறிய முடியாமையாலே எப்போதுமாக உபமானத்தால் அறியப்படுவதான முழுநலமாக இருப்பான் எனலும் ஒன்று. இனன் - உபமானம். 1‘உப்புக் கட்டியானது உள்ளும் புறமும் உப்புச் சுவையதாகவே இருப்பது போன்று, இறைவனுடைய திருமேனியும் உள்ளும் புறமும் ஞானமயமாகவே இருக்கும்,’ என உவமைமுகத்தால் விளக்குதல் காண்க. 2‘ஆனந்தமே இறைவன்,’ ‘ஆனந்தமயமானவன்’ எனக் கூறியிருத்தலும் ஓர்தல் தகும். மற்றும், 3‘கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்பத்துன்பக் கழி நேர்மை, ஒடியா இன்பப் பெருமையோன்’ என்பது இவருடைய திருவாக்கு. இவற்றால் ஓர் உபமானத்தாலே அறியில் அறியலாமத்தனை; தன்னையே இழிந்து அறியப் போகாது என்றபடி. ‘உணர் முழு நலம்’ என்பதற்கு, மேற்கூறிய இருவகைப் பொருள்களுள், கட்டடங்க ஞானமுமாய், கட்டடங்க ஆனந்தமுமாய் இருப்பன் என்று கூறிய முதற்பொருளே சிறப்புடைத்து. ‘என்னை?’ எனின், நூல்களில் அநுகூலஞானம் ஆனந்தமாகவே இருப்பினும், வழக்கில் ஞானம் வேறாகவும் ஆனந்தம் வேறாகவும் பிரித்துப் பேசப்படும்.

    எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் - முக்காலத்திலும் ஒப்பு இல்லாதான். ‘சித்து, அசித்து, ஈஸ்வரன்’ என்னும் முப்பொருள்களே நம் மதத்தில் கூறப்பட்டுள்ளன; அவற்றுள், உயிர்ப்பொருள் உயிரல் பொருள் இவற்றின் தன்மையினின்றும் வேறுபட்டவன் இறைவன் என்பதை முன்னர் அருளிச்செய்தார்; ‘இங்குக் கூறுவது என்?’ என்னில், ‘திரள ஒப்பு இல்லையாகில், ஒரு வகையாலேதான் ஒப்பு உண்டோ?’ என்னில் அதுவும் இல்லை என்கிறார்,’ என்று 4அருளிச் செய்வாரும் உளர். அவ்வாறு அன்றி, 5‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்மிய திருஷ்டாந்தம இல்லை

 

1. பிரஹ - உபநி. 6. 5 : 23.

2. தைத்திரீய உபநிடதம்.

3. திருவாய், 8. 8 : 2. இம்மேற்கோளின் பொருள்:-கடி, நாற்றம் இரண்டும்
  ஒருபொருட்சொற்கள். வாசனை என்பது பொருள். ஆலை என்பது தேன்.
  இவ்விரண்டும் எல்லாவாசனைக்கும் எல்லாரசத்துக்கும் உபலக்ஷணம். பூவில்
  வாசனையையும் தேனில் ரசத்தையும் எடுத்து, அவற்றிலும், அல்பம்
  அஸ்ருரத்வம் முதலிய தோஷங்களைக் கருத்து நிலையுள்ளதாக்கிச்
  சேர்த்துப் பார்த்தால் சிறிது ஒப்பாம் என்பதாம்.

4. ‘அருளிச்செய்வாரும்உளர்’ என்றது, இராமாநுசருக்கு முன்னர் இருந்த
  பெரியோர்களைக் குறித்தது.

5. சாதர்மிய திருஷ்டாந்தம் - ஒத்த தர்மங்களையுடைய பொருள்களை
  எடுத்துக்காட்டாகக் கூறுதல். ‘ஆசிரியர் அகத்தியனாரைப் போன்று,
  ஆசிரியர் தொல்காப்பியனாரும் தமிழில் இலக்கண நூலைச் செய்தார்,’
  என்பது அதற்கு உதாரணமாம். வைதர்மிய திருஷ்டாந்தம் - வேறுபட்ட
  தர்மங்களையுடைய பொருள்களை எடுத்துக்காட்டாகக் கூறுதல். உதாரணம்,
  உரைக்கிடையிற்காண்க.