முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
340

97

97

        1கமலக் கண்ணன்என் கண்ணின் உள்ளான்
            காண்பன் அவன்கண்க ளாலே
        அமலங்க ளாக விழிக்கும்
            ஐம்புல னும்மவன் மூர்த்தி
        கமலத்து அயன்நம்பி தன்னைக்
            கண்ணுத லானொடும் தோற்றி
        அமலத் தெய்வத்தோடு உலகம்
            ஆக்கிஎன் நெற்றி யுளானே.

    பொ-ரை :
செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய இறைவன் என் கண்களுக்கு விஷயமானான். யானும் அவனைக் காண்கின்றேன். நான் குற்றமற்றவன் ஆகும்படி அவன் தன் திருக்கண்களாலே நோக்குகிறான். ஐம்பொறிகளும் சரீரத்தைப் போன்று அவனுக்கு அடிமையாகிவிட்டன. தாமரைமலரில் வீற்றிருப்பவனும் எல்லாக் குணங்களும் நிறைந்தவனும் ஆன பிரமனைச் சிவபெருமானோடு படைத்து, பின், குற்றம் அற்ற ஏனைய தேவர்களோடு உலகங்களையும் படைத்த இறைவன், இப்பொழுது என் நெற்றியில் தங்கி இருக்கின்றவன் ஆனான்.

    வி-கு : விழிக்கும் - செய்யுள் என் முற்று. ‘தோற்றி’ என்னும் எச்சத்தை ‘ஆக்கி’ என்னும் வினைப்பெயருடன் முடிக்க. ஆக்கி என்பது, ‘நூற்றுவரைக்கொல்லி, சேர்ந்தாரைக்கொல்லி’ என்பன போன்று வந்த வினைப்பெயர். ஆக்கி - உண்டாக்கினவன்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘கண்ணிலே நின்ற நிலை பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லாநின்றான்,’ என்கிறார்.

    கமலக்கண்ணன் என் கண்ணின் உள்ளான் - புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான். 1‘இறைவன் கண்ணுக்குப் புலப்படுமவன் அல்லன்,’ என்னும் மரியாதை குலைந்தது. ‘அவன் அவ்வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினான் ஆகில், நீர் பின்னைச் செய்வது என்?’ என்னில், காண்பன் - நானும் கண்டு அனுபவியாநின்றேன். ‘உலகத்திற்கே வேறுபட்ட இறைவனை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரானபடி எங்ஙனே?’ எனின், அவன் கண்களாலே அமலங்காக விழிக்கும் - அவன் தன் திருக்கண்

 

1. ‘கமலக்கண்ணன் கண்ணிலுள்ளான்’ என்றிருத்தற்பாலது.